எங்கள் கூட்டாளியான ஸி.ப்பி.பி. ப்ரிஸம் (CPB Prism) உடன் இணைந்து பதின் பருவத்தினருக்கான ஒரு பயிற்சித் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் அவர்கள் புகைப்படக் கலையின் அடிப்படை விதிகளைக் கற்றுக் கொள்வதோடு, “ஆண்மை/ ஆண்களின் படங்கள்” என்ற ஆய்வுப் பொருளோடும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இவ்வாறு ஒரு கலையின் உணர்சி வெளியீட்டு வடிவங்களை ஆண்மை மற்றும் அது குறித்து தொன்று தொட்டு நிலவி வரும் கருத்தாக்கங்களைப் பற்றியும் ஆய்வு செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த 12 வார நிகழ்ச்சியின் முடிவில் இதில் பங்கெடுப்பவர்கள் புகைப்படக் கலையின் அடிப்படை விதிகளைக் கற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் “ஆண்மை” என்ற ஆய்வுப் பொருளுடன் தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
இத்திட்டத்திற்கென வெளியிடப்படவுள்ள கையேட்டினை புகைப்படக் கலை மற்றும் “ஆண்மை” பற்றிய கருத்தரங்குகளை நடத்த விரும்பும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கையேட்டில் செயல்முறைகள், அனைத்து வகையான பயிற்சிகள், அவற்றுக்குத் தேவையான கருவிகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளன. “ஆண்மை”யை புகைப்படக் கலையின் மூலம் பதின்பருவத்தினரோடு ஆய்வு செய்ய விரும்பும் அனைவரும் இந்தக் கையேட்டினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென விழைகிறோம்.
இத்திட்டத்தில் பங்கேற்க உங்களுக்கு விருப்பமிருப்பின் தயவுசெய்து கோதே நிலையம், சென்னை உடனோ அல்லது சி ப்பி பி ப்ரிஸம் உடனோ தொடர்பு கொள்ளவும்.