Infohäuser (தகவல் வீடுகள்)
ஜேர்மனியில் பல்வேறுபட்ட இடங்களில் 35 இத்தகைய தகவல் வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. இங்கு ஜேர்மனியில் வாழ்க்கை,தொழில் மற்றும் ஜேர்மன்மொழி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். அவ்விடத்திலுள்ள சலுகைகள் மற்றும் ஏனைய மக்களோடு தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்த தகவல் வீடுகள் பொதுவான கட்டமைப்புக்களில் உதாரணமாக அதிகார அலுவலகங்கள் , நூலகங்கள் மற்றும் வளர்ந்தோருக்கான கல்வி நிலையங்கள் போன்றவற்றில் அமைந்துள்ளன.
அருகாமையில் தகவல் வீடு அமைந்துள்ளதா?
வரைபடத்தில் எந்த இடங்களில் தகவல் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதைக்காணலாம். இதன் கீழ் முகவரிகளையும் கணலாம்.