Ein Mann sitzt auf einer Steintreppe im Freien. Er hat den Kopf nach unten gesenkt und wirkt betrübt. © Goethe-Institut
சுதந்திர கூட்டாட்சியின் வேற்றுமைக்கெதிரான அலுவலகம் (ADS) ஓர் ஜேர்மனிய அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இது யாருக்காவது அவர்களின் சுதந்திரத்தில் வேற்றுமை / பாரபட்சம் காணப்படின் அதற்கான நடவடிக்கையை இவ்வமைப்பு எடுக்கின்றது. இந்த வேற்றுமையானது இனம்,அல்லது நெறிமுறை,பால்,மதம் அல்லது நம்பிக்கை,இயலாமை,வயது அல்லது  பாலியல் அடையாளம் என்பவற்றைப்பொறுத்து காணப்படும்.
 
இந்த ADS ஆனது வேற்றுமைகளிலிருந்து விடுவிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றது. அத்துடன் மற்றைய முகவர்களுடன் கலந்தாலோசிக்கவும் ஒழுங்குபடுத்துகின்றது.
 
இனம் மற்றும் இன தோற்றமைப்பு சம்பந்தமான வேற்றுமை பொதுவானதாகும். இதற்கான பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை எல்லோருக்கும் சமமாகவே காணப்படும். வாழ்க்கைத்தகமையைப்பொருட்படுத்தாது, ஏன் அகதிகள் மற்றும் புதிதாக குடியேறினோர் அனைவருக்கும் பொதுவானதாகும். முக்கியமாக இதில் தொழில்,வீடு மற்றும் சேவைகள்.

விசா வழங்குவதில் வேற்றுமை அனுபவம்.

Visawie? என்பது  மக்களுக்கு விசா வழங்குவதற்கான தகவல்களை வழங்கும் ,பல்வேறுபட்ட கூட்டமைப்புக்களுடன் கூடிய  ஓர் அமைப்பாகும்.  அவர்கள் நம்பத்தகுந்த ,வெளிப்படையான விசா வழங்கல், பயந்தரக்கூடிய தகவல்களை  வழங்கல், வலப்பதிவுகளை சமாளித்தல் மற்றும் ஒத்துழைப்பையும்  வழங்குகின்றனர்.