
இணைய ஆலோசனை
JMD4you- 27 வயதிற்குட்பட்ட இளவயதினருக்கு
இணைய ஆலோசனை jmd4you இளவயதினருக்கான ஆலோசனை மையத்தின் ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.
நீங்கள் உங்கள் ஆலோசனை வழங்குநரை இணயத்தின் மூலமாகத்தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளைச் சமர்ப்பிக்கலாம். இந்த ஆலோசனைக்குழுவானது குடியேறுவோருக்கான ஆலோசனைமையத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் ஜேர்மனியில் உங்கள் வாழ்க்கை அல்லது ஏதாவது பிரச்சனைகள் சம்பந்தமான உங்களது சகல வினாக்களுக்கும் விடையளிக்கிறார்கள். உதாரணமாக , எங்கே நான் வாகனனுமதிப்பத்திரத்தைப் பெறலாம்?
ஜேர்மனியில் நான் என்ன வேலை செய்யலாம்? எனக்கு ஒரு சட்டத்தரணி தேவை, நான் என்ன செய்ய வேண்டும்?....
ஆலோசனைகளானவை உறுதி,அநாமதேயம்,பன்மொழிகளடங்கிய இலவசமான சேவையாகும். இவ் இணைய ஆலோசனையானது தற்போது ஜேர்மன்,அல்பானிய மொழி,அராபிய மொழி,ஆங்கிலம்,ரஸ்ஷிய மற்றும் துருக்கி மொழிகளில் வழங்கப்படுகிறது.
www.jmd4you.de
Mbeon - குடிபெயர்ந்த 27 வயதிற்கு மேற்பட்ட வளர்ந்தோருக்கானது.
Mbeon ஆனது நாடு தழுவிய வளர்ந்த குடிபெயர்ந்தோருக்கான இணைய ஆலோசனை சேவை (MBE) . இது மெசேஞ்சரைத்தழுவிய ஒரு சட்டிங் முறையாகும்.
mbeon உடன் நீங்கள் இலவச App ஐ உங்கள் ஸ்மாட் போனில் வைத்திருந்து எந்நேரமும் MBE உடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம். இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் இணையத்தில் நம்பகரமாக ஆலோசனையைப்பெற்றுக்கொள்ளலாம் மற்றும் எந்நேரத்திலும் உங்கள் கேள்விகளைக்கேட்கலாம்.
சகல mbeon ஆலோசனையாளர்களும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தேர்ச்சி பெற்ற ஆலோசனையாளர்கள் ஆவர்.
ஆலோசனையாளர் பட்டியலில் ஒரு ஆலோசனையாளரத்தெரிவு செய்யவும். தெரிவின் மூலம் மொழி மற்றும் இடத்தை தெரிவு செய்யலாம். ஏறத்தாழ 48 மணி நேரத்தில் பிரத்தியேகமான சட் ஒன்றில் உங்கள் வினாவுக்கான பதில் கிடைக்கும்.
ஆலோசனைகளின் போது அதே ஆலோசனையாளருடன் உங்கள் விருப்பம் போல் எவ்வளவு தடவையாயினும் கலந்துரையாட உங்களுக்கு அனுமதி உண்டு. தேவையேற்படும் போது ஆலோசனை நேரத்தை எமது நிலையத்தில் வைத்துக்கொள்ள முன்பதிவை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
சகல எழுத்து வடிவ செய்திகள், ஆவணங்கள்,ஒலிப்பதிவுக்குறிப்புக்ககள் என்பன mbeon மூலம் தரவுகள் பாதுகாக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இத்தரவுகள் ஜேர்மனியிலுள்ள சர்வர் ஒன்றில் பதிவு செய்யப்படுகின்றது.
www.mbeon.de