Jemand arbeitet an einer Werkbank. Man sieht ein Lineal, einen Messschieber und Klebeband. © Goethe-Institut

பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ்    

சாதாரணமாக ஜேர்மனியில் நல்ல தொழில் ஒன்றைப் பெற்று கொள்ள பட்டப்படிப்பு அல்லது தொழில்முறைக் கல்விப் பயிற்சி இருப்பின் பெற்றக் கொள்ள முடியும். மற்றும் இதற்கு சான்றிதழ் அவசியம். இவை மொழிபெயர்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

In einer Küche eines Restaurants arbeiten verschiedene Menschen. © Goethe-Institut

தொழில்முறைக்கல்வி – படிமுறை

அதிகுறைந்தளவாக மேல்நிலைப்பள்ளி (Hauptschule) இருந்து பாடசாலை விலகல் சான்றிதழ் தொழில்முறைக் கல்வி தகமைக்கு உங்களுக்கு தேவைப்படும். இந்த சான்றிதழ் இல்லாவிடின் தொழில்முறைக்கல்வியில் இடத்தை ஒதுக்குவதற்கு கடினமாக இருக்கும். ஜேர்மனியில் அநேகமான தொழில்களுக்கு தொழில்முறைக்கல்வியானது இரு வகையாக வழங்கப்படுகிறது. நீங்கள் தொழிலை செய்முறை அனுபவத்துடன் ஓர் கம்பனியில் கற்றுக் கொள்ளலாம். மற்றும் வர்த்தக பாடசாலைக்கும் செல்லலாம். இங்கு அத்தொழிலுக்கான தத்துவக் கோட்பாடுகள் கற்பீர்கள். அத்துடன் பொதுவான பாடங்களும் உள்ளன. உதாரணமாக ஜேர்மன் அறிவியல் அல்லது விளையாட்டு.

நீங்கள் கம்பனியில் செய்முறைப்பயிற்சியில் ஈடுபடுவீர்கள். நீங்கள் ஒரு கிழமையில் 3 அல்லது 4 நாட்கள் கம்பனியில் வேலை செய்தும், வர்த்தக பாடசாலையில் ஒரு கிழமைக்கு 8 அல்லது 12 மணித்தியாலங்கள் கற்பீர்கள்.
அல்லது சில கிழமைகள் பாடசாலையிலும், சில கிழமைகள் கம்பனியிலும் செலவிட நேரிடும். அநேகமாக சகல தொழில்களுக்கும் தொழில்முறைக்கல்வி உண்டு. அத்துடன் அநேகமான கம்பனிகளில் இப்பயிற்சி நெறிகளை பெற்றுக் கொள்ளலாம். தொழில்முறைக்கல்விக்கான இடத்தை தெரிவு செய்வது என்பது ஓர் தொழிலை தேடிக் கொள்வது போலாகும். இதற்காக விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். (வேலை தேடுதலைப் பார்க்கவும்). இப்பயிற்சி காலத்தில் உங்களுக்கு சிறு தொகைப் பணம் வழங்கப்படும்.

தொழில் முறைக்கல்வி – காலவரையறை

அநேகமாக 2 அல்லது 3 வருடங்கள். ஆனால் தொழில்களுக்கான பயிற்சிகளும் உண்டு. நீங்கள் விரைவாக கற்றுக் கொள்ளலாம். உதாரணமாக குழந்தை பராமரிப்பு, முதியோரைப்பராமரித்தல், உணவு தயாரித்து விநியோகித்தல் அல்லது அழகுக்கலை, உங்களுடைய நகரத்தில் உள்ள வேலைவாய்ப்புப் பணியகத்தில் இதைக் கேட்டறிந்து கொள்ளலாம்.

Auf dem Bild ist eine Bibliothek mit Tischen, an denen man sitzen und arbeiten kann, zu sehen. © Goethe-Institut

பட்டப்படிப்பு

உங்களுக்கு உயர்தரக் கல்வி தகமைகள் இருப்பின் நீங்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியும். உங்களுக்கு தொழில்சார் கல்வி தகமை இருப்பின் நீங்கள் தொழில்நுட்பக் கல்லூரிக்கும் செல்ல முடியும்.  தொழில்நுட்பக் கல்லூரி பட்டப்படிப்பானது பல்கலைக்கழக படிப்பை விட அநேகமாக தொழில்முறைப்பயிற்சியை மையமாக கொண்டது.

ஜேர்மனியிலுள்ள உயர்தரக்கல்வி மாணவர்கள் (பல்கலைக்கழகம் மற்றும் தொழில்சார் கல்வி) அதிகளவிலான ஜேர்மன் தொழித்தகமை கொண்டிருக்க வேண்டும். ஜேர்மனி மொழி உங்களது தாய்மொழி அல்லாதுவிடின், உங்களது மொழித் தகமையை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அநேகமாக பல்கலைக்கழக அனுமதிக்கான ஜேர்மனி மொழி பரீட்சை – DSH  அல்லது ஜேர்மனிமொழியை அந்நிய மொழியாகக் கொண்டுள்ளோருக்கான பரீட்சை – Test Daf

ஒரு சில மாநிலங்களில் நீங்கள் பட்டப்படிப்பை கற்க பணம் செலுத்த வேண்டி ஏற்படும். ஏனையவைகளில் இல்லை. இதற்கான தகவல்களை Studieren.de எனும் இணைய முகவரியில் அறிந்து கொள்ள முடியும். இக்கட்டணங்கள் வித்தியாசப்படும். அதை வருடத்திற்கு 150€ தொடக்கம் 700€ வரைக்கும்  வேறுபடலாம். இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு 6 தொடக்கம் 8அரை வருடங்களும் முதுநிலைப்பட்டப்படிப்பிற்கு 2 தொடக்கம் 4அரை வருடங்களும் தேவைப்படும்.

ஒவ்வொரு நகரத்திலும் தொழில் ஆலோசனை மையங்கள் (BIZ) உள்ளது. இதை உங்களுக்கான தொழில்வாய்ப்பு நிறுவனத்தினூடாக அறிந்து கொள்ளலாம். இங்குள்ள தொழிலாளர்கள் தொழில்சார் பயிற்சி, பட்டப்படிப்பு வகுப்புக்கள், மற்றும் ஏனைய உயர்படிப்பு கல்வி சம்பந்தமாக ஆலோசனை வழங்குவார்கள்.
 

Video International Sign

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.

படிவத்தை தொடர்பு கொள்ள