சக தொழிலாளர்கள்
முதல் சில நாட்களில் உங்களது வேலையும், சக தொழிலாளர்களையும் அறிந்துகொள்வீர்கள். அத்துடன் உங்களது சக தொழிலார்களை உத்தியோகபூர்வமற்ற முறையில் அதாவது ஜேர்மன் மொழியில் 'du' முறையில் அழைக்கலாம். ஆனால் உங்களது மேலதிகாரி முதலாளியாக இருக்கும் பட்சத்தில் அது வேறுபடும். இச்சந்தர்ப்பத்தில் உத்தியோகபூர்வமான முறை அதாவது ஜேர்மன் மொழியில் 'Sie' முறையில் அழைக்கலாம். இருப்பினும் இது கம்பனிகளுக்கிடையில் வேறுபடும்.
தொழிலாளர் பாதுகாப்பு
ஜேர்மனியில் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் உள்ளது. நீங்கள் தொழில்புரியும் கம்பனிகள் இதற்காக சில ஆரோக்கிய சம்பந்தமான பாதுகாப்பு விதிமுறைகளை கையாள வேண்டியுள்ளது. உதாரணமாக இதற்காக தொழிலுக்கென வடிவமைக்கப்பட்ட ஆடை, அன்றாட இடைவேளை மற்றும் தொழில்நேரங்கள் என்பன அடங்கும். கம்பனிகள் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சங்கத்தைக் கொண்டுள்ளன. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருப்பின் நீங்கள் தொழிலாளர் சங்கத்திடம் தொடர்பு கொள்ள முடியும். அவர்கள் உங்களது முதலாளியிடம் பேசுவர்.
வேலை நேரங்களும் விடுமுறையும்
உங்களது தொழிலைப் பொறுத்தே வேலை நேரம் அடங்கியுள்ளது. உதாரணமாக ஒரு தாதியின் வேலை நேரம் வைத்தியசாலையில் மாறுபடும். சில வேளைகளில் காலையில் அல்லது மாலை, அல்லது இரவில். ஓர் அலுவலகத்தில் வேலை நேரம் எப்போதும் வரையறுக்கப்பட்டதாக இருக்கும். காலையில் நீங்கள் வேலையை ஆரம்பித்து 8 அல்லது 9 மணித்தியாலத்தின் பின் வேலை நேரம் முடிவுறும். சில அலுவலகங்களில் நேரத்தை உங்களுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக காலை 8 அல்லது 9 மணிக்கு ஆரம்பித்து மாலைக்கு முன்னராக அல்லது பிந்திய நேரத்தில் வேலை முடித்துச் செல்லலாம். ஒவ்வொரு தொழிலிலும் குறைந்தது ஓர் இடைவேளையாயினும் 30 அல்லது 60 நிமிடங்களுக்கு இருக்கும். மக்கள் அநேகமாக ஒரு கிழமையில் 38-40 மணித்தியாலங்கள் வேலை செய்வார்.
ஓவ்வொரு தொழிலாளியும் குறிப்பிடத்தக்க அளவு விடுமுறையை ஒரு வருடத்தில் கொண்டுள்ளனர். உங்களது வருட விடுமுறையை நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். உங்களது முதலாளி அதற்கு அனுமதி தர வேண்டும். உங்களுக்கு விடுமுறை தேவையான நேரம் நீங்கள் அதை இடைக்கிடையில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் கம்பனியில் அதிகளவு வேலைப்பழு உள்ளபோது அது சாத்தியப்படாது. சில வேளையில் முழுக்கம்பனியும் விடுமுறையில் உள்ள போது நீங்களும் உங்களது விடுமுறையை எடுத்தே ஆக வேண்டும். உதாரணமாக சில கம்பனிகள் நத்தார் பண்டிகைக்காலத்தில் விடுமுறையை வழங்குவர். உங்களுடைய வருடாந்த விடுமுறையின் போது ஊதியங்கள்/ சம்பளம் என்பவை உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் சுகவீனமுற்றிருந்தால் உடனடியாக உங்களது தொழில் வழங்குனருக்குத் தெரிவித்து வைத்தியரிடம் செல்ல வேண்டும். வைத்தியர் உங்களுக்கு உங்களது தொழில் வழங்குனருக்கு கொடுக்கக் கூடிய மருத்துவச் சான்றிதழை வழங்குவார். இந்த மருத்துவச் சான்றிதழை நீங்கள் உங்கள் கம்பனியிடம் வழங்க வேண்டும். அநேகமாக உங்களது தொழில்வழங்குநருக்கு நீங்கள் மூன்று நாட்களுக்கு மேல் நோய்வாய்பட்டிருப்பின் மருத்துவச் சான்றிதழானது கட்டாயமாக தேவைப்படும்.
தொழிலுக்கான ஆடை
சில தொழில்களுக்கு கட்டாயமாக வேலைத்தளத்திற்கான ஆடையை அணிய வேண்டும். உதாரணமாக கட்டிடப்பணிகளில் திடீர்விபத்தைத் தடுக்க மற்றும் சில வேளைகளில் நீங்கள் சீருடையையும் அணிய வேண்டி இருக்கலாம். உதாரணமாக நீங்கள் விமானநிலையத்தில் தொழில்புரிபவராயின் அதற்கான சீருடை அணிய வேண்டி ஏற்படும் அல்லது உங்கள் கம்பனி சின்னம் அடங்கிய ரீ-சேட்டை அணிய வேண்டி ஏற்படலாம். இதன் மூலம் வாடிக்கையாளர் உங்களை ஓர் தொழிலாளியாக அடையாளம் காண உதவியாக இருக்கும்.
அறிவிப்பு
நீங்கள் மேற்கொண்டு உங்கள் கம்பனியில் தொழில்புரிய முடியவில்லை எனின் அறிவிப்புக்கடிதத்தைக் கையளிக்க வேண்டும். இது எப்போதும் கையெழுத்தில் அமைய வேண்டும் மற்றும் அதற்கான கால வரையறையும் உண்டு. சாதாரணமாக அதன் காலவரையறை 3 மாதங்கள்.
கல்வி மற்றும் பயிற்சியைத் தொடர்தல்
நீங்கள் ஏற்கெனவே மேற்படிப்பை அல்லது பட்டப்படிப்பை முடித்தவரானால் மற்றும் குறிப்பிட்டளவு நேரம் நீங்கள் தொழில் புரிந்தவராயின், நீங்கள் உங்கள் படிப்பை மீண்டும் தொடரலாம். உங்களது திறமையை நீங்கள் ஆழமாக மேம்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக வளர்ந்தோருக்கான கல்விநிலையங்கள் பலதரப்பட்ட சலுகைகளை வழங்குகிறது.Video International Sign
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள