Nahaufnahme auf einen Tisch im Freien mit einem Getränk darauf. Man sieht einen Arm einer Person, die ein Smartphone bedient. © Goethe-Institut

ஜேர்மனியிலிருந்து தமது தாய் நாட்டிற்கு தமது கைத்தொலைபேசி  சிம் அட்டை மூலம் பேச விரும்புவோருக்கு அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படும். ஏனெனில் அநேகமான சிம் அட்டைகள் வெளிநாட்டிற்கு தொழிற்பட மாட்டாது. வெளிநாட்டிற்கு தொழிற்படும் சிம் அட்டைகள் விலைகூடியவையாகக்காணப்படும்.
 
ஆனால் அநேகமான சாத்தியமான வழிகள் உள்ளன . கீழ்காணும் இணையத்தில் இதற்கான சகல தகவல்களும் காணப்படுகின்றன.

கைத்தொலைபேசி ஒப்பந்தம்.

ஓர் சாத்தியமான வழிக்கு உதாரணம் கைத்தொலைபேசி ஒப்பந்தம். இதற்கு ஜேர்மனிய வங்கிக்கணக்கும் அடையாள அட்டையும் ஆவசியம். இதன் மூலம் வழங்குநர் , நீங்கள் பணத்தைக்கட்ட முடியுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வார். மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது யாதெனில் : உங்களுக்கு ஏதாவது விளக்கமற்று உங்களது ஒப்பந்தப்படிவத்தில்  இருப்பின் கையெழுத்திட வேண்டாம்.  ஓர் மொழி பெயர்ப்பாளரிடம் சென்று விளக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்.
கைத்தொலைபேசி ஒப்பந்தம் பெரும்பாலும் ஒன்று தொடக்கம் இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும். இத்தகைய ஒப்பந்தத்தை முன்னரே ரத்து செய்வது பெரும்பாலும் சாத்தியப்படாது. இதற்கான பற்றுச்சீட்டு அநேகமாக மாத இறுதியில்  செலுத்தப்பட வேண்டும். அதாவது ஒப்பந்தம் செல்லுபடியாகும் காலம் வரை.
அவதானம்!  நீங்கள் உங்கள் ஒப்பந்தத்தை அதன் முடிவின் பின் மாற்ற உள்ளீர்களா? அப்படியானால் அதற்கு முன்னதாக  உங்கள் ஒப்பந்தத்தை துண்டிக்க வேண்டும். அநேகமாக ஒப்பந்த முடிவுக்கு  மூன்று மாதங்களுக்கு முன்னதாக அறிவுறுத்தப்பட வேண்டும். அல்லாவிடின் உங்களது ஒப்பந்தம் தன்னிச்சையாகவேஅடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படக்கூடும்.

முற்பணம் செலுத்தகூடிய ஸிம் காட்டுக்கள்

அடுத்த ஓர் சாத்தியமான வழி முற்பணம் செலுத்தகூடிய ஸிம் அட்டைகள். இவற்றை அநேகமாக சுப்பர்மார்க்கட்டுகள், பெற்றோல் நிலையங்கள்  அல்லது முழைளம் களில் சிறிய அளவிலான பணத்திற்கு வாங்கலாம். இதற்கும் ஓர் ஒப்பந்தப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதை செயற்படுத்துவதற்கு பெயர், முகவரி மற்றும் பிறந்த திகதி போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக கடைகளில் கடவுச்சீட்டு, தனிநபர் அடையாள அட்டை அல்லது சட்ட ரீதியாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணத்தை புகைபடத்துடன் நிரூபிக்க வேண்டும். சில வேளைகளில் தமது வதிவிட அனுமதிப்பத்திரமும் தேவைப்படும்.
 
நீங்கள் இத்தகைய முற்பணம் செலுத்தகூடிய ஸிம் காட்டை ஸிம் காட்விற்பனை நிலையங்களில் நேரடியாகப்பெற்றீர்களா?  அப்படியானால் நேரடியாகவே நீங்கள் ஸிம் காட்டை செயற்படுத்தலாம். இங்கு உங்களுக்கு உதவி கிடைக்கும். அல்லது சுப்பர்மார்க்கட்டில் ஸிம் காட்டை வாங்கியிருந்தால் உங்களது கைத்தொலைபேசி மூலம் இதை செயற்படுத்த வேண்டும்.
 
ஸிம் காட்டை செயற்படுத்திய பின்  அதற்கு பணத்தை சேர்த்துக்கொள்ள வேன்டும். நீங்கள் செலுத்தும்  பணம் அழைப்பை ஏற்படுத்தவும் SMS மற்றும் இணையத்தைப்பார்வையிடவும் பயன்படுத்தப்படும். மேலதிகமாக பணம் தேவைப்படின் இதற்காக TOP up காட்டை வாங்கலாம். இவற்றை ஸிம் காட் விற்பனை செய்யும் கடைகளில் வாங்க முடியும். உதாரணமாக சுப்பர்மார்க்கட்டுகள், பெற்றோல் நிலையங்கள்  அல்லது Kiosk களில் Top up காட்களில் நீண்ட இலக்கங்கள் குறிக்கப்பட்டிருக்கும். பணத்தை இடுவதற்கு இந்த இலக்கங்களை கைத்தொலைபேசியில் உள்ளிட வேண்டும்.

உங்களுக்கு ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டிற்கு அழைப்பை ஏற்படுத்த வேண்டுமா? அவ்வாறாயின் இதற்கு ஒவ்வொரு குறுகிய அழைப்பிற்கும் 15 சதம் செலவாகும். சீரியா, எரிற்றியா மற்றும் பல்கன் பிராந்தியங்களுக்கு அழைக்க பணம் அதிக செலவாகும். கீழ்காணும் இணையத்தில் சர்வதேச அழைப்புகளுக்கான விலைப்பட்டியல் பல்வேறுபட்ட வழங்குநர்களிடமிருந்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிலவேளைகளில் மேலதிகமாக வரிக்கட்டணத்துடன் வாங்க வேண்டி ஏற்படலாம் இதன் மூலம் உதாரணமாக குறிப்பிடப்ப்ட்ட நிமிடங்களுக்கு வெளிநாட்டிற்கு இலவசமாக உரையாடலாம்.

In einem Geschäft hängen viele verschiedene SIM-Karten von verschiedenen Anbietern auf einer Verkaufsstange. © Goethe-Institut

தொலைபேசி டேட்டாக்கள்

ஸ்மாட்போன் மூலம் முற்பணம் செலுத்தும் ஸிம் அட்டை இருப்பின் இணையத்தையும் பார்வையிட முடியும். இதனால் பணம் விரைவில் முடிவுறும். இதன் காரணமாக தகுந்த டேட்டா  தொகையை வாங்குவது இலாபகரமானது. இதன் மூலம் தொலைபேசியில் இணையத்தை குறிப்பிட்ட காலம் வரை வரையறுக்கப்பட்ட பணத்திற்கு  பாவிக்க முடியும். அல்லது குறிப்பிட்ட டேட்டா அளவை வாங்குவது சிறந்தது.

Ein Mann sitzt vor einem Café und nutzt sein Smartphone. © Goethe-Institut

WLAN

இணையத்தை இலவசமாக உபயோகிக்க நீங்கள் WLAN வலையமைப்பை உபயோகிக்கலாம். அநேகமான ஊடகங்கள், நூலகசாலைகள் மற்றும் பொதுக்கட்டடங்களில் இலவச WLAN வழங்கப்படுகிறது. உங்களது இருப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள  இலவச WLAN ஐ அறிய வேண்டுமா?  Hotspot' எனும் இணையத்தளம்  உங்களுக்கு அருகிலுள்ள பொது இணையத்தை சுட்டிக்காட்டுகிறது.

Video International Sign

 

உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.

படிவத்தை தொடர்பு கொள்ள