ஆரம்பிப்பதற்கான முக்கியமான ஆவணங்கள்
ஜேர்மனியில் உங்களுக்கான நிரந்தரமான தொழிலை தேடிவீட்டீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு தொழிலாளி. உங்களின் தொழில் வழங்குனருக்கு சில முக்கியமான ஆவணங்கள் நீங்கள் வழங்க வேண்டும். முதலாவதாக உங்களுக்கு மருத்துவ காப்புறுதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜேர்மனியில் எல்லோருக்கும் மருத்துவ காப்புறுதி இருக்க வேண்டும். சாதாரணமாக உங்களுக்கும் தேசிய மருத்துவக்காப்பீட்டு அட்டை அவசியம். இதை நீங்கள் மருத்துவ காப்புறுதி கம்பனிகளிலிருந்து பெற முடியும். இதற்காக பொலிஸிலிருந்து தடைநீக்கச் சான்றிதழ் உங்களுக்கு அவசியம். இதை நீங்கள் வதிவிட பதிவு அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
காப்புறுதி மற்றும் வரி
ஒர் தொழிலாளியாக உங்களுக்கும் ஓய்வூதியக் காப்புறுதி மற்றும் தொழிலற்ற காப்புறுதி என்பன உண்டு. ஆனால் இதற்காக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. இவை தன்னிச்சையாக உங்களுக்கு கிடைக்கும் காப்புறுதிகளாகும். உங்களது தொழில் வழங்குநர் உங்களது மருத்துவக் காப்புறுதி, ஓய்வூதியக் காப்புறுதி மற்றும் தொழிலற்ற காப்புறுதி என்பனவற்றின் ஒரு பகுதியை செலுத்துவார். நீங்கள் மிகுதியைக் கட்ட வேண்டும். இது தன்னிச்சையாக உங்களது சம்பளத்திலிருந்து கழிக்கப்படும். இதற்கு உங்களுக்கு வரிக்குறியீடு மற்றும் இலத்திரனியல் வருமான அட்டை என்பன தேவைப்படும். இவை இரண்டும் நீங்கள் வரித்திணைக்கள அலுவலகத்திலிருந்து பெறலாம். இத்தகைய வரியை நீங்கள் நேரடியாக செலுத்தத்தேவையில்லை. வரித்திணைக்கள அலுவலகத்திலிருந்து இவ்வரி நேரடியாக உங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.
தொழில் ஒப்பந்தம்
ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழில் ஒப்பந்தம் எழுதப்படும். நீங்களும் உங்களின் தொழில் வழங்குநரும் இவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இவ் ஒப்பந்தத்தை சரிவர வாசித்து அறிந்து கொண்டால் மட்டுமே இதில் கையெழுத்திட வேண்டும். இதில் ஏதும் சந்தேகங்கள் இருப்பின் நீங்கள் அதை வினாவலாம். வளர்ந்தோருக்காக Migrationsberatung für erwachsene Zuwanderer அதாவது வளர்ந்தோருக்கான குடிவரவு ஆலோசனையை அணுக முடியும். (MBE). குழந்தைகள் மற்றும் 27 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆலோசனையை Jugendmigrationsdiensten அதாவது இளவயதினருக்கான ஆலோசனை நிலையத்தை அணுகலாம். (JMD).
உங்கள் தொழில் ஒப்பந்தத்தில் சகல விதிமுறைகளையும் நீங்கள் காணலாம். நீங்களும் உங்கள் தொழில் வழங்குநரும் இவற்றைப்பின்பற்ற வேண்டும். உதாரணமாக இதில், உங்களது மாத சம்பளம் எவ்வளவு? உங்களது விடுமுறை நாட்கள் எவ்வளவு? நீங்கள் நோய்வாய்ப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? புதிய ஓர் தொழிலில் சாதாரணமாக தேர்வாய்வு காலம் உண்டு. இதன் காலவரையறை வேறுபடும். சில வேளைகளில் இது சில வாரங்களாகவும், அல்லது ஆறு மாத காலமாகவும் இருக்கலாம். இத் தேர்வாய்வு காலத்தில் உங்கள் தொழில் வழங்குநர் உங்களை நன்கு அவதானித்து, நீங்கள் தொடர்ந்து அவர்களின் வேலைத்தளத்தில் தொழில் புரிய முடியுமா என்பதை தீர்மானிப்பார். அத்துடன் இதே தொழிலை நீங்கள் தொடர முடியுமா என்பதையும் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த கால எல்லை தேர்வாய்வு காலத்தை விட குறுகியதாகவே இருக்கும். (அநேகமாக 2-3 கிழமைகள்). அதன் பிறகு சாதாரணமாக 3 மாதங்கள்.
சிறு தொழில்கள்
ஜேர்மனியில் சிறு தொழில்களும் / 520 யூரோ உள்ளன. இத் தொழிலில் சாதாரணமாக 520€ வரைக்கும் நீங்கள் சம்பாதிக்க முடியும். உங்களுக்கு தன்னிச்சையாக மருத்துவக்காப்பீடு மற்றும் ஓய்வூதியக்காப்பீடு போன்றவை கிடைக்கப்பெறுவீர்கள். உங்களின் தொழில்வழங்குனரே இக்கட்டணங்களைச் செலுத்துவார். நீங்கள் இக்கட்டணங்களைச் செலுத்தத்தேவையில்லை.
சொந்தமான தொழில்
நீங்கள் சொந்தமாக தொழில் புரிபவரா? அல்லது இன்னுமொரு வகையில் சொல்வதாயின் நீங்கள் ஓர் தொழிலாளி இல்லையா? அப்படியானால் உங்களுக்கான மருத்துவக்காப்பீடு தேவை. எப்படியாயினும் உங்களுக்கான மருத்துவக்காப்பீட்டுப் பணத்தை நீங்களே செலுத்த வேண்டும். அத்துடன் ஓய்வூதியக்காப்பீடு இருப்பது நல்லது. சில தொழில்களில், அதாவது இயந்திர பொறிமுறையாளர் அல்லது மகப்பேற்றுத்தாதியாளர் போன்றவர்களுக்கு ஓய்வூதியக்காப்பீடு கட்டாயமானது. வரித்திணைக்களத்திற்கு சென்று வரிப்பண எண்ணிற்கு விண்ணப்பிக்க வேண்டும். வரித்திணைக்களமானது உங்களுடைய ஆண்டுக்குரிய எதிர்பார்க்கக்கூடிய வருமானத்தை வினவும் அதன் மூலம் உங்களுக்கான வரி தீர்மானிக்கப்படும். உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து வரிப்பணத்தை பரிமாற்றம் செய்வதன் மூலம் வரிப்பணத்தை செலுத்த வேண்டும். உங்களுக்கான சொந்தக்கம்பனியை நீங்கள் நிறுவ விரும்புவீர்களேயானால் அதற்கான வர்த்தக அனுமதிப்பத்திரம் அவசியம். இது வர்த்தக அனுமதிப்பத்திர அலுவலகத்தில் கிடைக்கும். உங்களுடைய நகர மண்டபத்தில் அந்நகரிலுள்ள வர்த்தக அனுமதிப்பத்திர அலுவலகம் இருக்கும் இடத்தை கேட்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் கடையோ அல்லது உணவகமோ திறக்க தீர்மானித்திருந்தால் அதற்கு வர்த்தக அனுமதிப்பத்திரம் அவசியம்.
Video International Sign
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள