வரவுப்பதிவு
நீங்கள் ஜேர்மனியில் புதிதாகக் குடியேறி ஜேர்மன்மொழியைக் கற்க விரும்புகிறீர்களா? இதற்காக நீங்கள் ஒருங்கிணைப்பு ஜேர்மன்மொழி கற்கைநெறியைப் பின்பற்றலாம். உங்களுக்கு ஜேர்மன்மொழி தெரியாது அல்லது மிகக்குறைவாகவே தெரியுமாயின் உங்களுக்கு இது கட்டாயமாகும். அதாவது நீங்கள் இந்த ஜேர்மன்மொழி வகுப்புக்களைப் பின்பற்ற வேண்டும். குடிவரவுத் திணைக்களமானது உங்களுக்குப் பொருத்தமான பயிற்சி வகுப்புக்கள் பட்டியலையும், அவ்வகுப்புக்களை நடத்துவோரின் பட்டியலையும் தந்து உதவும். இதன்பின் நீங்கள் உங்களுக்கு அண்மையிலுள்ள மொழிப்பயிற்சி பள்ளியில் உங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இம் மொழிப்பயிற்சி நெறிகளை நடத்துவோரின் முகவரிகளைஇ முக்கியமான முகவரிகளின் கீழ் நீங்கள் காணலாம். இதன் மூலம் உங்களுக்கு அருகாமையில் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும் இடங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தரவுகள் அடங்கிய பெறுபேறுகள் உதாரணமாக முகவரி அல்லது தொலைபேசி எண் ஓர் அட்டையில் காணலாம்.
மொழி மதிப்பீடு, வகுப்புக்கள் மற்றும் இறுதிப்பரீட்சை
மொழிப்பயிற்சியை வழங்குவோரிடம் நீங்கள் உங்களை பதிவு செய்த பின் நீங்கள் உங்களுக்கான மொழி மதிப்பீட்டை செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் ஒருவர் தனக்குத்தகுந்த பயிற்சி வகுப்பை தேர்ந்தெடுக்க முடியும். இதற்கான கட்டணம் ஓர் மணித்தியாலத்திற்கு 2,29 யூரோ ஆகும். உங்களிடம் பணவசதி இல்லையாயின் நீங்கள் கட்டணத்தை செலுத்த தேவையில்லை. மற்றும் ஃ அல்லது உங்களது போக்குவரத்துக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். இந்த ஒருங்கிணைப்புக் கற்கைநெறியில் மொழிப்பயிற்சி மற்றும் ஒழுங்கமைத்தல் அடங்கும்.
சாதாரண மொழிப்பயிற்சி வகுப்புக்கள் 700 கற்கை மணித்தியாலங்களைக் கொண்டது. இங்கே நீங்கள் மொழியுடன் நாளாந்த தலைப்புக்களையும் அதாவது பொருட்களை வாங்குதல், வசித்தல், பிள்ளைகள், தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, பாடசாலை மற்றும் தொழில் அல்லது தொழில் தேடல் போன்றவற்றைப்பற்றியும் கற்றுக் கொள்வீர்கள்.
இறுதியில் உங்களுக்கு பரீட்சை நடைபெறும். ( Deutschtest für Zuwanderer) பரீட்சையின் பின் ஒழுங்கமைப்பு கற்கைநெறிக்கான சான்றிதழ் வழங்கப்படும். உங்களால் பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்றவை A2 அல்லது B1 தரத்திற்கு முடிபும். அநேகமான தொழில் வழங்குநர்கள் இந்த சான்றிதழை விரும்புவர். சில உத்தியோக சம்பந்தமான அலுவலகங்கள் அதாவது குடிவரவு அலுவலகங்கள் போன்றவற்றிற்கும் இத்தகைய சான்றிதழ் தேவைப்படும். நீங்கள் ஜேர்மன் குடியுரிமையை பெற விரும்புவீர்களானால் இத்தகைய சான்றிதழ் மிகவும் உதவியாக இருக்கும்.
நீங்கள் இந்தப் பரீட்சையில் சித்தியடையவில்லையா? அப்படியானால் நீங்கள் மீண்டும் 300 பாடநேர வகுப்புக்களை கற்க முடியும். பின்னர் மீண்டும் பரீட்சையை செய்ய முடியும்.
விசேடமான வகுப்புக்கள்
27 வயதுவரையுள்ளோருக்காக பிரத்தியேகமான கற்கைநெறி வகுப்புக்கள் உள்ளன. இவை உங்களுக்கு தொழில்சார் கற்கைநெறிகளை கற்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். தகவல்கள் Bundesamt fur migration und fluchtlinge தலைப்பில் உள்ளது.
சில நகரங்களில் விசேடமான வகுப்புக்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றில் சில வகுப்புக்கள் பெண்களை முதன்மைப்படுத்தியே நடைபெறுகிறது. இதில் இலக்கியம் சார்ந்த எழுத்தறிவு அல்லது குழந்தை பராமரிப்புடன் கூடிய பயிற்சி வகுப்புக்கள். உங்கள் மொழிப்பயிற்சி நிலையத்தில் கேளுங்கள்.
Video International Sign
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள