கணக்கு
ஜேர்மனியில் நீங்கள் வாழ, தொழில்புரிய விரும்பினால் உங்களுக்கு ஓர் வங்கிக்கணக்கு தேவை. உங்களுக்கான வங்கிக் கணக்கை ஓர் உயர்தரவங்கியில் அல்லது சேமிப்பு வங்கியில்(ளுpயசமயளளந) திறந்து கொள்ள முடியும். அநேகமான வங்கிகள் மற்றும் சேமிப்பு வங்கிகளுக்கு கிளைகளும் உள்ளன. சில வங்கிகளுக்கு நீங்கள் இணையத்தின் மூலமே அவற்றை நிர்வகிக்க முடியும். பொதுவாக வங்கிக்கு குறிப்பிட்ட ஒரு தொகையைச் செலுத்த வேண்டும். இத்தகைய கணக்கானது பாடசாலை மாணவர், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாகும். பலதரப்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளன.
கடன் கணக்கின் மூலம் நீங்கள் ஏற்கனவே கணக்கில் இட்ட பணத்திலிருந்தே பணத்தை மீளப்பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் இக்கணக்கிலிருந்து மிகைக் கொடுப்பனவுகள் அதாவது உங்கள் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், உங்கள் கணக்கிலிருந்து பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். வங்கியானது உங்களுக்கு ஓர் குறிப்பிட்ட தொகை வரைக்கும் கடனை வழங்குகின்றது. ஆனால் நீங்கள் இத்தொகைக்கான முதலை மட்டுமல்ல வட்டியையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். வட்டியானது அநேகமாக அதிகமாகக் காணப்படும்.
கணக்கை ஆரம்பித்தல்
நீங்கள் வங்கி கணக்கை ஆரம்பிக்க வேண்டுமா? இதை எந்த வங்கிக் கிளையிலும் ஆரம்பிக்க முடியும். ஆனால் முதலில் வங்கிஃசேமிப்பு வங்கி உங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக உங்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு தேவைப்படும்.
அநேகமான வங்கிகள் இணையத்தில் அல்லது தபால் மூலமாக வங்கிக்கணக்கை ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கின்றன. இதற்கு நீங்கள் தபால் மூலமான அடையாள நடைமுறையைக் கையாள முடியும். இதற்கு வங்கி உங்களுக்கு சில பத்திரங்களை அனுப்பும். அவற்றையும் உங்களுடைய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றுடன் தபால் அலுவலகத்திற்குச் சென்று அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். சில வேளைகளில் உங்களுடைய பதிவு அட்டை தேவைப்படும்.
நேரடியான பற்று
உங்களுடைய சம்பளம் மற்றும் மாத வாடகைகளுக்கு நடைமுறைக்கணக்கு அவசியம். உங்களுடைய தொழில் வழங்குனர் உங்களுடைய சம்பளத்தை நேரடியாகப் பற்றுக் கணக்கில் இடுவார். சாதாரணமாக உங்களுடைய மாத வாடகையை நேரடியாகப் பற்றுக் கணக்கில் இருந்தே நீங்கள் செலுத்த வேண்டும். நாளாந்த கொடுப்பனவுகளையும் இக்கணக்கிலிருந்து செலுத்தும் மூலமாகவும் செய்து கொள்ள முடியும். மற்றைய கொடுப்பனவுகளுக்கு வங்கியிலிருந்து பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது பண வைப்புச்சீட்டு எனப்படும். நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? இந்த பணத்தைப் பெறுபவர் யார்? இப்படியான தகவல்களை இந்த பண வைப்புச் சீட்டில் எழுதவும். பின்னர் இதை வங்கியில் கொடுக்கவும். நீங்கள் இணைத்தின் மூலம் பண வைப்பைச் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் வங்கியில் கணக்கைத் திறக்கும் போது, கணணிஃஇணையத்தின் மூலம் அல்லது வீட்டிலிருந்தவாறே நிர்வகிக்கப்படும் முறைக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
2014 முதல், 34 ஐரோப்பிய நாடுகளில் (ஜூலை 2018 நிலவரப்படி) முடிந்தவரை எளிதில் பணத்தை (யூரோக்கள்) மாற்றுவதற்காக SEPA கொடுப்பனவுகள் கிடைக்கின்றன. IBAN கணக்கு எண் மற்றும் BIC வங்கி குறியீட்டை மாற்றுகிறது. உங்கள்இலத்திரனியல் அட்டையில் IBAN மற்றும் BIC ஐக் காணலாம்.
இலத்திரனியல் அட்டை (EC Card)) மற்றும் கடனட்டை (Credit Card)
உங்களுடைய நடைமுறைக் கணக்கிற்கு இலத்திரனியல் அட்டை வழங்கப்படும். நீங்கள் விரும்பினால் கடனட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். (உதாரணமாக Master card/ Visa) சாதாரணமாக கடனட்டைக்கு நீங்கள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வங்கியிலிருந்து உங்களுக்கான இலத்திரனியல் அட்டை அல்லது கடனட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். அட்டையில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். சில தினங்களுக்குப் பிறகு உங்களுக்கான இரகசிய இலக்கம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதை நீங்கள் மனப்பாடமாக்கிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்கள் இலத்திரனியல் அட்டை மூலம் எந்த யுவுஆ மூலமும் பணத்தைப்; பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய இரகசிய இலக்கம் அவசியம். கடனட்டை மூலம் சில கடைகளில் மற்றும் இணையத்தில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம். பணத்தை வங்கிக் கிளைகளில் செலுத்தலாம்.
Wenn Sie Ihre EC- oder Kreditkarte verloren haben oder sie geklaut wurde, sollten Sie die Karten so schnell wie möglich sperren lassen:
Sperr-Notruf: 116116
வட்டி
உங்கள் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைப் பொறுத்து அதற்கான வட்டி இடப்படும். நடைமுறைக்கணக்கிலுள்ள பணத்திற்கு அதிகக் குறைவான வட்டியே இடப்படும். நீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால் உடனடி அணுகு முறைக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள். இதற்கு உங்களுக்கு நடைமுறைக்கணக்கை விட கொஞ்சம் அதிகப்படியான வட்டி கிடைக்கும்.
தலைப்புகளுக்கான இணைப்புகள்
Video International Sign
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள