நோய்வாய்ப்பட்டிருக்கும் போது என்ன செய்வது?
சாதாரண சிறிய நோய்கள் உதாரணமாக குளிர்காய்ச்சல் அல்லது தலைவலியாயின் மருந்தகங்களில் நீங்கள் இதற்கான மருந்தைப்பெற்றுக்கொள்ளலாம். அநேகமான நோய்களுக்கு மருந்துச்சீட்டு மூலமே மருந்தைபெற்றுக்கொள்வீர்கள். இந்த மருந்துச்சீட்டை வைத்தியர் ஒருவரே தர வேண்டும். இவ்வகையான மருந்திச்சீட்டு மூலம் மருந்தகங்களில் மருந்தைப்பெற்றுக்கொள்ளலாம். இதற்கான கட்டணத்தின் ஒரு பகுதியை நீங்கள் செலுத்த வேண்டும்.
மருந்தகங்கள் பொதுவாக திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி அல்லது 6.30 வரைதிறந்திருக்கும்.சனிக்கிழமைகளில் மதியம் 1 மணிவரை திறந்திருக்கும். நகரங்களில் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். அத்துடன் அவசர சிகிச்சையானது சனி/ ஞாயிறு தினங்களில் மற்றும் இரவிலும் திறந்திருக்கும்.
வைத்தியரைச்சந்தித்தல்
நீங்கள் நோய்வாய்ப்பட்டுள்ளீர்களா? அப்படியானால் பொதுவான அல்லது உங்கள் குடும்ப வைத்தியரிடம் முன்பதிவை மேற்கொண்டு வைத்தியரைச்சந்திக்கலாம். உங்கள் பிள்ளை நோய்வாய்ப்பட்டுள்ளதா? அப்படியானால் நீங்கள் குழந்தைக்கான வைத்தியரை அணுகவும் வைத்தியரிடம் சாதாரணமாக திங்கள் தொடக்கம் வெள்ளி வரை செல்லலாம். சனி / ஞாயிறு தினங்களில் மற்றும் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைப்பிரிவை அணுகலாம்.
வைத்தியரிடம் செல்லும் போது உங்கள் காப்பீட்டுக்கான அட்டை தேவைப்படும். முதல் தடவையாக வைத்தியரிடம் செல்லும் போது நீங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கேள்விப்படிவத்தைப்பூர்த்தி செய்து உங்கள் நோய்க்கான குறிப்பையும் பூர்த்தி சேய்ய வேண்டும்.பதிவை அடுத்து காத்திருக்கும் அறையில் நீங்கள் காத்திருக்க வேண்டும் பின்னர் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். இதற்கு ஒரு சில நிமிடங்களே செல்லும். சிலவேளைகளில் ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாகவும் செல்லக்கூடும்.
வைத்தியரின் அறையில் அவர் உங்களிடம் ஒருசில கேள்விகளைக்கேட்பார். இங்கு உங்களின் நோய்க்கான அறிகுறிகளை நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். உங்களுக்கு வலி ஏதாவது உள்ளதா? எப்போதிலிருந்து உள்ளது? இந்த வலி ஏற்கனவே உங்களுக்கு முன்னர் இருந்துள்ளதா? இத்தகைய வினாக்களுக்குப்பின் வைத்தியர் உங்களைப்பரிசோதிப்பார். இதன் பின்னர் உங்கள் நோயை கண்டறிந்து உங்களுக்கு எந்த நோய் உள்ளது எனக்கூறுவார்.
வைத்தியரை அணுகுவதற்கு நீங்கள் சட்ட ரீதியான ஆரோக்கியக்காப்பிட்டைக்கொண்டுள்ளீர்கள் எனின் , நீங்கள் கட்டணத்தைச்செலுத்தத்தேவையில்லை. தனிப்பட்ட மேலதிக தேவைகளுக்கு நீங்கள் கட்டணத்தைச்செலுத்த வேண்டும். உங்கள் வைத்தியர் இதைப்பற்றி அறிவுறுத்துவார்.
நோய்விடுமுறை அறிவுறுத்தல் மற்றும் வைத்திய நிபுணர்கள்.
வைத்தியர் உங்களைப்பரிசோதித்தபின் உங்களுக்கு அவர் நோய்விடுமுறை அறிவுறுத்தல் ஒன்றை எழுதித்தருவார். அத்துடன் மருந்திற்கான சீட்டையும் தருவார். சில வேளை அடுத்த சந்திப்பிற்கான முன்பதிவையும் தரக்கூடும். அல்லது பொதுவைத்தியர் வைத்தியர் நிபுணர் ஒருவரை சிபார்சு செய்து எழுத்தித்தரவும் கூடும். உதாரணமாக காது, மூக்கு, தொண்டை வைத்தியர், எலும்பு சம்பந்தமான வைத்தியர் அல்லது பெண்வைத்திய நிபுணர்.
இத்தகைய வைத்திய நிபுனர்களிடம் மேலதிக பரிசோதனைக்கு உங்களை அனுப்புவார்கள்.
மருத்துவச்சோதனை
நோய்வாய்ப்படுதலை தவிர்க்கும் நோக்கத்தோடு, அதாவது உடனடி நோய்தொற்றுதலை தவிர்க்க அல்லது அவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ள , முன்கூட்டிய மருத்துவப்பரிசோதனைகள் உள்ளன. சில பரிசோதனைகள் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளன. ஏனைய பரிசோதனைகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
பிள்ளைகளுக்கான பரிசோதனைகள் அவர்களின் விருத்திகளைக்கண்டறிய உதவுகிறது. இவற்றை தடுக்கும் முகமாக தடுப்பூசிகளும் உதாரணமாக, சின்னம்மை, கக்குவான் இருமல் மற்றும் கூவைக்கட்டு போன்றவையாகும்.
35 வயதிலிருந்து , சிறுநீரகம் மற்றும் இருதய வால்வு நோய்கள்,நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கான ஆரம்பக்கண்டுபிடிப்பு பரிசோதனைகள் உள்ளன. பெண்களுக்கான மார்பகப்பரிசோதனைகளும் உள்ளன.
பால் ,வயது, குடும்பநோய்கள் அல்லது கர்ப்பம் என்பவற்றைப்பொறுத்து சில ஆய்வுகள் உள்ளன. முக்கியமாக பயணத்தின் போது,ஆனால் ஜேர்மனியில் வாழும் போது குறிப்பிட்ட நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உங்கள் வைத்தியரிடம் கேளுங்கள்.
மிகவும் முக்கியமான அவசர தொலைபேசி எண்கள்
சகல அவசர தொலைபேசி எண்களுக்கும் இலவசமாக எந்தவொரு தொலைபேசியிலிருந்தும் அழைக்கலாம்.
காவற்துறை 110
காவற்துறையினர் அவசர மருத்துவம் அற்ற , வன்முறை மற்றும் கடுமையான போக்குவரத்து விபத்துகளுக்கு, தயவு செய்து உங்களது பெயரை எழுதி ,
விபத்து எங்கே நடந்தது?
என்ன நடந்தது?
பாதிக்கப்பட்டோர் யார்?
ஏற்பட்ட காயங்கள் யாவை?
மேலதிக வினாக்களுக்கு காத்திருக்கவும்.
தீயணைப்புப்படை / அவசர/ மீட்புப்பணி சேவை 112
112 ஆனது உயிருக்கு ஆபத்தான சந்தர்ப்பங்களில் அதாவது மார்பு வலி , பாரிச வாதம் அல்லது கடுமையான விபத்துகளின் போது அழைக்கப்படலாம். விபத்தின் கடுமை ஆனது உங்களுக்கு தெரியாவிடின் தாமதிக்காமல் மீட்புப்பணியினருக்கு அழைப்பு விடுக்கவும். இது அவசரமான நிலைமையில் உயிரைக்காப்பாற்ற உதவும்.
மருத்துவ அவரச சேவை 116117
வார இறுதி நாட்களில் அவசர மருத்துவ சேவை ஏற்படின் நீங்கள் அவசர சிகிச்சைப்பிரிவை அழைக்கலாம் அல்லது அருகிலுள்ள அவசர மருத்துவ சிகிச்சைக்குப்போக முடியும். இத்தகைய மருத்துவ சிகிச்சை நிலையங்கள் அநேகமாக வைத்தியசாலைகளுடன் சம்பந்தப்பட்டவை. அத்துடன் இரவு 10 மணிவரக்கும் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்.
அல்லாவிடின் 116117 ஐ அழையுங்கள். இந்த அழைப்பானது நாடெங்கும் பாவனையிலுள்ள இலவச அழைப்பாகும்.
இதன் மூலம் அருகாமையிலுள்ள வைத்தியரிடம் செல்ல அறிவுறுத்தப்படுவீர்கள். அவசியமெனின் வீட்டுக்கு வைத்தியர் வருகைதர தலைமையகத்திலிருந்து அனுமதி வழங்கப்படும்.
பல் அவசர சேவை 01805 / 986700
இச்சேவையானது நீங்கள் நேராக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள சிகிச்சை நிலையங்களின் தொலைபேசி எண்கள் வழங்கப்படும்.
குழந்தைகள்
குழந்தைகளுக்கு மேற்குறிப்பிடப்பட்டவை மற்றும் எண்கள் பொதுவாக வளர்ந்தோரைப்போல உபயோகிக்க முடியும். குழந்தைகள் சம்பத்தப்படும் போது அவ்வேளைகளில் விரைவாகவும் சரியாகவும் , நிபந்தனைகளின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாகும்.
முதலில் உதாரணமாக ஒரு குழந்தை விழுந்தால் அவன் ஃஅவளை சமாதானப்படுத்தி அரவணைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையை அமைதிப்படுத்தி அதை உடனடியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.அதிகளவில் கவலைப்படாமல் உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
முழுமையான முதலுதவிப்பெட்டி எப்பொழுதும் சிறுகாயங்களைக்கட்ட துணிப்பட்டி மற்றும் தொற்று நீக்கும்காய மருந்துகளுடன் இருக்க வேண்டும்.
குழந்தை மற்றும் இளைஞர் அவசர அழைப்பு 0800 / 1110333
இந்த எண்ணிற்கு குழந்தைகள் மர்றும் இளைஞர் சம்பந்தப்பட்டவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம். இணையம் சம்பந்தப்பட்ட ,குழந்தைகளுக்கான பாலியல் சம்பந்தப்பட்ட சகல பிரச்சனைகளுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
பெற்றோருக்கான அவசர அழைப்பு. 0800 / 1110550
இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு கல்வி சம்பந்தமான இணையம் சம்பந்தமான, பாலியல் வன்முறை மற்றும் பிள்ளைகளுடன் பெற்றோர் எதிர் கொள்ளும் சகல பிரச்சனைகளுக்காகவும் பேச முடியும்.
பெண்களுக்கெதிரான வன்முறை உதவிக்கான அவசர அழைப்பு 08000 / 116016
தேசிய அளவிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசனை சேவை.சமூகளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இலவசமாக ஆலோசனைகளை வழங்க முடியும். தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படும்.வருடத்தில் சகல நாட்களும் அதாவது 365 நாட்களும் சேவை உள்ளது.
கற்பிணிப்பெண்களுக்கான உதவிச்சேவை 0800 / 4040020
(அநாமதேயம் மற்றும் பாதுகாப்பு)
நெருக்கடியான நேரங்களில் தொலைபேசி எண் 0800 /1110111
பிரச்சனைகள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் அதாவது துணைவர்,பாடசாலை மற்றும் வேலைத்தளங்களில் அடாவடித்தனங்கள், வேலை இல்லாப்பிரச்சனை,அடிமைப்படல், நோய்கள், தனிமை, நெருக்கடியான நிலைமை, மதப்பிரச்சனைகள் போன்றவற்றைப்பற்றிக் ;கலந்தாலோசிக்கலாம்.
உடனடியாகத்தடைப்படுத்தல் 116116
உங்கள் வங்கி இலத்திரனியல் அட்டை , கடனட்டை மற்றும் அடையாள அட்டை களவாடப்பட்டிருந்தால் அல்லது தொலைந்திருந்தால் மேற்கண்ட தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தடைப்படுத்தலாம்.
வேறுபட்ட காப்புறுதி ஒப்பந்தம்.
எல்லோரும் எதிர்பாராத அபத்துகளுடனேயே வாழ்கிறார்கள். உதாரணமாக நோய் அல்லது இனிமேல் வேலைசெய்ய முடியாத நிலை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் திடீரென உங்களுக்கு மேலதிக செலவுகள் ஏற்படும்,. ஆகவே நீங்கள் மட்டும் இதற்குப்பொறுப்பாளி ஆக முடியாது. காப்புறுதிப்பணத்தை நீங்கள் எடுக்க முடியும். நீங்கள் ஓர் காப்புறுதி நிறுவனத்திற்கு மாதாந்தம் அல்லது வருடத்திற்கு பணத்தைச்செலுத்துகின்றீர்கள். நோய்வாய்ப்படும் போது அல்லது வேலை செய்ய முடியாதவிடத்து காப்புறுதி நிறுவனமானது உங்களுக்கு பணத்தை வழங்கும். சில வகையான காப்புறுதிகள் ஜேர்மனியில் கட்டாயமானவை. எல்லோரும் இத்தகைய காப்புறுதியை வைத்திருக்க வேண்டும். சகலருக்கும் இத்தகைய காப்புறுதிகள் அவசியம். மற்றைய காப்புறுதி தன்னிச்சையானது. நீங்கள் விரும்பினால் இத்தகைய காப்புறுதியை வைத்திருக்கலாம்.
கட்டாயமான காப்புறுதி
மிகவும் கட்டயமான காப்புறுதித்திட்டமாக உடல்நலக்காப்புறுதி, ஓய்வூதியக்காப்புறுதி மற்றும் வேலையற்ற நிலையிலுள்ள போது வைத்திருக்கவேண்டிய காப்புறுதி ஆகும்.
உடல் நலக்காப்புறுதியானது வைத்தியரிடம் செல்லும்போது அல்லது ஏதாவது மருந்துகளை வாங்கும் போது அதன் கொடுப்பனவுகளுக்காக தேவைப்படும்.
வேலையற்ற சந்தர்ப்பங்களில் இக்காப்புறுதியானது 3 வருடங்களுக்கு அதாவது நீங்கள் தொழிலை இழந்தால் அல்லது புதிய தொழில் கிடைக்கவில்லையாயின் பண உதவி வழங்கும்.
ஓய்வூதியக்காப்புறுதியானது தொழில் புரிவோருக்கு மிகவும் கட்டாயமானதாகும். அதாவது நீங்கள் முதிர்வடையும் போது இனிமேல் தொழில் செய்ய முடியாது எனும் நிலையில் இது முக்கியமானதாகும். ஓய்வூதியக்காப்புறுதித்திட்டம் நீங்கள் வாழ்வதற்கு பணத்தை வழங்குகிறது. உங்களுக்கு தொழில் வழங்குனர் உள்ளாரா? அப்படியானால் நீங்கள் உடல்நலக்காப்புறுதி மற்றும் சமூகக்காப்புறுதிப்பணத்தை முழுமையாக செலுத்தத்தேவையில்லை. உங்களது தொழில் வழங்குனர் ஏறத்தாழ அதன் அரைவாசிப்பணத்தை செலுத்துவார். உங்களிடம் கார் அல்லது மோட்டார் சைக்கிள் இருப்பின் அதற்காகவும் வாகனக்காப்புறுதி அவசியம்.
உங்களுக்கு ஓர் விபத்து நடந்து மற்றைய கார் சேதத்திற்கு உள்ளானால் என்ன செய்வது? இத்தகைய வாகனக்காப்புறுதி திருத்தியமைத்தலுக்கான பணத்தை அல்லது அதன் ஒரு பகுதியைச்செலுத்தும்.
தன்னிச்சையான /தூண்டுதலற்ற காப்புறுதி
மிக முக்கியமான தன்னிச்சையான ஃ தூண்டுதலற்ற காப்புறுதிகளானது பொறுப்பு காப்புறுதி வீடு மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டவைக்கான காப்புறுதி மற்றும் வாழ்க்கைக்கான காப்புறுதியாகும்.
நீங்கள் மற்றவருக்கு சொந்தமான பொருளை சேதமாக்கி விட்டீர்களா? அப்படியானால் பொறுப்புக்காப்புறுதி அதற்கான பணத்தைச் செலுத்தும். வீடு மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டவைக்கான காப்புறுதி வீட்டில் ஏதாவது சேதம் ஏற்படின் அதற்கான கட்டணத்தைச்செலுத்தும். உதாரணமாக வீட்டு நீர் வழங்கல் அமைப்பில் சேதம் ஏற்படல்.
வாழ்க்கைக்கான காப்புறுதி நீங்கள் இறக்கும் போது அதற்கான கட்டணத்தை வழங்கும். இப்பணம் உங்களுடைய பிள்ளைக்கு வழங்கப்படும்.
இதைத்தவிர ஏனைய பலதரப்பட்ட காப்புறுதிகளும் உள்ளன.
தனியார் விபத்துக்காப்புறுதியானது உதாரணமாக தொழில் புரியும் நேரங்களைத்தவிர ஏனைய நேரங்களில் ஏதாவது விபத்து ஏற்படின் அதற்கான கட்டணத்தைச்செலுத்தும். சட்டரீதியான பாதுகாப்புக்காப்புறுதியானது சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக உதாரணமாக ஓர் வழக்கறிஞரை வாடகைக்கு அமர்த்த இக்காப்புறுதி தேவைப்படும். கட்டணப்பாதுகாப்புக்காப்புறுதி, பிரயாணக்காப்புறுதி, மற்றும் செல்லப்பிராணிகளுக்கான காப்புறுதி என்பனவும் காணப்படுகின்றன. ஆனால் எந்தக்காப்புறுதி முக்கியமாக உங்களுக்கு தேவைப்படும் என்பதை கவனித்தில் கொள்ளவும். ஏனெனில் ஒவ்வொரு காப்புறுதிக்கும் பணம் செலவாகும்.
தலைப்புகளுக்கான இணைப்புகள்
Video International Sign
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள