கர்ப்பம்
வாழ்க்கை கர்ப்பத்துடன் ஆரம்பமாகிறது. இதற்கான வினாக்கள் ஏதுமிருப்பின், நீங்கள் கர்ப்பம் சம்பந்தமான ஆலோசனை மையத்தை அணுகலாம்.
கர்ப்பகாலத்தில் தொடர்ச்சியாக நீங்கள் பெண்நல மருத்துவரை அணுக வேண்டும். அவர் உங்களுக்கான கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் உங்கள் குழந்தையின் உடநலத்தைக் கண்காணிப்பார். இதே கடமை தான் ஒர் மருத்துவச்சிக்கும் உண்டு. அவர் உங்களுக்கு கர்ப்பகாலத்தில் ஆலோசனைகளை வழங்குதல் மட்டுமல்லாது, மகப்பேற்றின் பின்னரும் ஆலோசனை வழங்குவார். மகப்பேறின் போது மருத்துவச்சியும் கூட இருப்பார். உங்களது குடும்ப வைத்தியர், மகப்பேற்று வைத்தியரை அல்லது மருத்துவச்சியை நீங்கள் அணுக உங்களுக்கு உதவுவார். அநேகமான பெண்கள் மகப்பேற்று ஆயத்த வகுப்புக்களுக்குச் செல்வார்கள். இங்கே உங்களுக்கு மகப்பேற்றுக் குறிப்புக்களை வழங்குவார்கள் அத்துடன் மற்றைய சக கர்ப்பிணிப்பெண்களின் தொடர்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
தொழில்புரியும் தாய்மார்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு, மகப்பேற்றுக்கால விடுமுறை, மற்றும் பெற்றோர்களுக்கான சலுகை
உங்களுக்கு நிரந்தரமான தொழில் இருப்பின் தொழில்புரியும் தாய்மார்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு சலுகையை குழந்தை பிறக்க முன் பெறமுடியும். அதாவது நீங்கள் வேலை செய்யத் தேவையில்லை. அநேகமான தொழில்களில் இச்சலுகை மகப்பேற்றிற்கு 6 கிழமைகளுக்கு முன்னமேயாகும். Multerschutz விதிமுறைகளுக்கு இணங்க, மகப்பேற்றுக்கால விடுமுறையானது ஆகக்குறைந்தது 14 வாரங்களாகும். இக்கால வரையறையை நீடிக்க முடியும். உங்களது தொழில்வழங்குநர் தொழில் ஒப்பந்தத்தை இக்கால வரையறைக்குள் ரத்துச் செய்ய முடியாது. Multerschutz விதிமுறைக்குப் பின் பெற்றோருக்கான விடுமுறையை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். உங்களது பிள்ளை 3 வயது வரும் வரை நீங்கள் வீட்டிலிருக்க முடியும். 3 வயதிற்குப்பிற்பாடு உங்களது தொழிலுக்கு மீண்டும் செல்ல முடியும்.
பெற்றோருக்கான விடுமுறையின் முதல் 12 மாதங்களுக்கு பெற்றோருக்கான கொடுப்பனவு கிடைக்கும். உங்கள் துணைவரும் பெற்றோருக்கான விடுமுறையைப் பெற்றிருப்பின் இது 14 மாதங்களுக்கு நீடிக்க முடியும். இக் கொடுப்பனவுகள்; உங்களது மொத்த சம்பளத்தில் தங்கியுள்ளது. இக்கொடுப்பனவுக்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். உங்களுக்கு தொழில் இல்லாவிடினும் இது உங்களுக்கு கிடைக்கும். இப் பெற்றோருக்கான சலுகையுடன், குழந்தைக்கான சலுகைக்காகவும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். குழந்தைக்கான சலுகையை உங்களது பிள்ளை 18 வயதை அடையும் வரை பெற்றுக் கொள்ள முடியும்.
முற்பாதுகாப்பான ஆரோக்கியப் பாதுகாப்பு
உங்களது குழந்தை, குழந்தைகளுக்கான வைத்தியரை அடிக்கடி அணுகி, ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். வைத்தியர் ஒவ்வொரு பரிசோதனைகளையும் ஓர் தரவுப்புத்தகத்தில் எழுதுவார். இவை ஆரோக்கியத்திற்கான முற்பாதுகாப்பு நடவடிக்கையாகும். உங்களது குழந்தைக்கு நோய் இல்லாவிடினும் இது முக்கியமாகும். குழந்தைக்கான தடுப்பூசிகளும் வைத்தியரினால் வழங்கப்படும்.
குழந்தை பராமரிப்பு
நீங்கள் முன்னதாகவே வேலைக்குப் போக வேண்டுமெனின் குழந்தைக்கான குழந்தை பராமரிப்பு நிலையத்தைத் தேட வேண்டும். இதற்காக அநேக சாத்தியக்கூறுகள் உள்ளன. 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அவர்களுக்கான பிரத்தியேக பராமரிப்பு நிலையத்திற்கு (Kinderkrippe)அல்லது தனிப்பட்ட ரீதியில் உங்கள் வீட்டுக்கு குழந்தை பராமரிப்பாளரை அமர்த்தலாம். 3 வயதிற்கு மேற்பட்டோர் பாலர் வகுப்பிற்கு அல்லது குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு செல்லலாம். (ஆரம்ப கல்வியைப் பார்க்கவும்). 6 அல்லது 7 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல வேண்டும். பாடசாலை வரவு மிகவும் அவசியமானதாகும். (பாடசாலை ஒழுங்கமைப்பைப் பார்க்கவும்). நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் உங்களது பிள்ளை முழுநேர பாடசாலைக்கு அல்லது பாடசாலைக்குப் பிறகு பராமரிப்பு நிலையத்திற்கு செல்லலாம். இங்கு மாலை 4 அல்லது 5 வரை தங்க முடியும். அநேகமாக இங்கு மதிய நேர உணவும் கிடைக்கும்.
பொழுதுபோக்குச் செயற்பாடுகள்
உங்கள் பிள்ளையுடன் நீங்கள் பொழுதுபோக்காக நேரத்தைக் கழிக்க அநேகமான செயற்பாடுகள் உண்டு. வெளி விளையாட்டு மைதானங்கள் சிறு பிள்ளைகளுக்காக உள்ளன. வளர்ந்தோருக்காக விளையாட்டு கழகங்கள் உள்ளன. உதாரணமாக கோடைகாலத்தில் வெளியரங்கிலமைந்த நீர்த்தடாகங்கள் உள்ளன. குளிர்காலங்களில் உள்ளரங்கில் அமைந்த நீர்த்தடாகங்கள் உள்ளன. நகரங்களில் குழந்தைகளுக்காக பிரத்தியேகமான சலுகைகள் விடுமுறை காலங்களில் வழங்கப்படுகின்றன. இவை அதிகூடிய விலையில் காணப்படமாட்டாது. இவற்றிற்கான தகவல்களை நீங்கள் உள்ளுரிலுள்ள இளைஞர் சங்கத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அநேகமான கழகங்கள் மூலமாகவும் பிரத்தியேக பொழுதுபோக்குச் செயற்பாடுகள் வழங்கப்படுகின்றன. (பொழுதுபோக்கைப் பார்க்கவும்).
அநேகமான ஜேர்மனியப்பிள்ளைகள் தமது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடுவார்கள். அவர்கள் மற்றையப்பிள்ளைகளையும் அழைப்பார்கள். உங்கள் பிள்ளைக்கும் அவ்வாறு அழைப்பிதழ் கிடைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்வாராயின் அவன்/அவள் இலகுவில் நண்பர்களைத் தேடிக் கொள்ள முடியும். சில வேளைகளில் சிலர் மற்றைய பிள்ளைகளை இரவில் தம்முடன் தங்குவதற்கு அழைப்பார்கள். இதுவும் இலகுவில் நண்பர்களை உருவாக்க உதவும்.
குடும்பத்தில் சர்ச்சைகள், நெருக்கடிகள் மற்றும் வன்முறை
வெவ்வேறு கருத்துக்கள், பொறாமை அல்லது எதிர்பாராத வாழ்க்கை சூழ்நிலைகள் குடும்பத்தில் சண்டைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். ஜோடி ஆலோசனை மையங்கள் ஒன்றாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க உதவும். குடும்ப நிவாரணம் பற்றி அறிய வாய்ப்புகளும் உள்ளன.
அவமானப்படுத்தப்பட்ட, கட்டாயப்படுத்தப்பட்ட, தனது குடும்பத்தில் அச்சுறுத்தப்பட்ட அல்லது உடல் அல்லது பாலியல் வன்முறையை அனுபவிக்கும் எவருக்கும் உதவி தேவை. தகவல் மற்றும் அவசர எண்ணை கூட்டாட்சி குடும்ப அலுவலகத்தின் இணையதளத்தில் காணலாம். பெண்களுக்கு சிறப்பு உதவி சலுகைகளும் உள்ளன.
Video International Sign
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள