கட்டாயமான பாடசாலை வரவுப்பதிவு மற்றும் கட்டணம்
ஜேர்மனியில் பாடசாலைக்கு கட்டாயமாகச் செல்ல வேண்டும். பிள்ளைகள் கட்டாயமாக 9 வருடங்களுக்குப் பாடசாலைக்குச் செல்ல வேண்டும். சில மாநிலங்களில் கட்டாயமான பாடசாலைப்பதிவு அவசியம். இது வதிவிட பதிவுகள் தெளிவில்லாத பிள்ளைகளுக்கு மிக அவசியமாகும்.
பாடசாலை வருடம் ஆவணி அல்லது புரட்டாதி மாதங்களில் தொடங்கி ஆனி அல்லது ஆடி மாதம் வரைக்கும் தொடரும். இது ஒவ்வொரு மாநிலங்களையும் பொறுத்தது.
அநேகமாக அரசாங்கப் பாடசாலைகளில் கற்கின்றனர் யாரும் பாடசாலைக் கட்டணங்களை செலுத்துவதில்லை. சில நேரங்களில் சிறிய தொகை செலுத்த நேரிடும். உதாரணமாக பிரதிகள், உபகரணங்கள் அல்லது சுற்றுலாக்களுக்காக தனியார் பாடசாலைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
பாடசாலை வகைகள்
வெவ்வேறு வகையான பாடசாலைகள் உள்ளன. சகல குழந்தைகளும் 6 அல்லது 7 வயதிலிருந்து ஆரம்பக் கல்வியை கற்கின்றனர். 4 வருடத்தின் பின் பிள்ளைகள் இடைநிலைக்கல்வியைக் கற்கின்றனர். இதில் பல வகையான பாடசாலைகள் உள்ளன. ஆரம்பநிலை பாடசாலையின் மூலம் உங்கள் பிள்ளை மாற்றப்படக்கூடிய இடைநிலை பாடசாலையைப் பற்றி உங்களுக்கு அறியத்தரப்படும்.
இடைநிலைப் பாடசாலை ( 5-9ம் வகுப்பு). இப்பாடசாலையில் நீங்கள் இறுதிப்பள்ளி சான்றிதழை பெற முடியும். அல்லது உங்கள் கல்வியை மேலும் தொடரக் கூடிய சான்றிதழைப் பெற முடியும். மேல்நிலைப் பாடசாலையில் (Haupt schule) செய்முறைப் பயிற்சி பாடங்கள், அதாவது மரம் / உலோக வேலைகள், அல்லது தொழில்நுட்ப வரைபுகள். பாடசாலையின் உயர்தர பாடசாலையாக Real schule உள்ளது (5-10ம் வகுப்பு). இப் பாடசாலையில் நீங்கள் Real schulabschluss ஐ கற்க முடியும். (இரண்டாம் தர பாடசாலை தகுதிச் சான்றிதழ்). Hauptschule அல்லது Realschule இன் பின் நீங்கள் ஒரு தொழிலைக்கற்க முடியும். இதன் பின் Gymnasium (இலக்கணப்பாடசாலை: 12ம் வகுப்பு வரை). இங்கு நீங்கள் உயர்தரக் கல்வியைக் கற்க முடியும். (Abitur) இது பல்கலைக்கழகத்தில் நீங்கள் கற்பதற்கு உங்களைத் தகுதிவாய்ந்தவராக்குகிறது. இங்கு அநேகமாக நீங்கள் 2 அல்லது 3 அந்நிய நாட்டு மொழிகளைக்கற்பீர்கள். உதாரணமாக ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு.
சில மாநிலங்களில் Gesamtschule உள்ளது. இதில் Hauptschule, Realschule, மற்றும் Gymnasium ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஒரு பிள்ளை பாடசாலை மாற வேண்டுமெனின் உதாரணமாக Hauptschule இலிருந்து Realschule க்கு மிகவும் இலகுவானதாகும். பாடசாலைகள் புறம்பாக இருப்பினும் பாடசாலைகள் மாற்றுவது சாத்தியமானது. ஆனாவ் இது நேரடியானது அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் இருமொழி பேசப்படும் பாடசாலை, பிரத்தியேகமான பாடசாலை, பிரத்தியேகக்கலாசாலை மற்றும் தொழில்சார் கல்லூரிகள் என்பன உள்ளன.
பாடசாலை நேரங்கள்
அநேகமான பாடசாலைகளில், படிப்பு பகல் அல்லது பிற்பகல் (2 அல்லது 3 மணி) அளவில் முடிவடைந்துவிடும். அதன்பின் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு பின்னரான பராமரிப்பு நிலையங்களுக்கு செல்லலாம். அங்கு அவர்கள் மதிய நேரத்தில் தங்க முடியும். அவர்களுக்கு உணவு மற்றும் வீட்டு வேலைகளில் (பாடங்கள்) உதவிகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் பாடசாலைக்குப்பிறகான மதிய நேர பாரமரிப்பு நிலையங்களுக்கு கட்டணங்களைச் செலுத்த வேண்டும். நாள் முழுவதுமான பராமரிப்பு நிலையங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. பிள்ளைகள் நாள் முழுவதும் தமது நேரத்தை இங்கே செலவிடுகின்றனர். அநேகமாக மாலை 4 அல்லது 5 மணிவரை.
பாடசாலை பாடங்கள்
பிள்ளைகள் பாடசாலையில் அநேகமான பாடங்களைக் கற்கின்றனர். இதில் தேச அப்பியாசங்களும் அடங்கும். ஆரம்ப பாடசாலையில் அநேகமாக அவர்கள் இருபாலருக்கும் சேர்ந்தே அப்பியாசங்களை கற்ப்பிக்கப்படுகின்றன. பெரும்பாலும் நீச்சல் வகுப்புக்கள் அடங்கும். அநேகமான பாடசாலைகளில் கிறிஸ்தவ சமய பாடங்கள் கற்ப்பிக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் சமய பாடங்களை தவிர்க்கவும் முடியும். அத்துடன் இப்பாடங்களுக்கு சமூகம் அளிப்பது கட்டாயம் அல்ல. நீதி நெறிப் பாடங்களும் இதற்குப் பதிலாக கற்ப்பிக்கப்படுகின்றன. சில பாடசாலைகளில் மற்றய மதங்களுக்காக பிரத்தியேக வகுப்புக்களும் நடைபெறுகின்றன. (உதாரணமாக இஸ்லாம் மற்றும் யூத மதம்).
பாடசாலை தவிர்ந்த நடவடிக்கைகள்
பாடசாலை மாணவர் அநேகமாக ஒரு வருடத்தில் ஒரு முறை வகுப்பு சுற்றுலாக்குச் செல்வார்கள். வகுப்பிலுள்ளோர் வேறு ஏனைய நகரம் அல்லது இடங்களுக்கச் செல்வார்கள். அநேகமாக 3-5 நாட்கள் பிள்ளைகள் ஒன்றாக சுற்றுலாச் செல்வார்கள். இதன் முலம் அவர்கள் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கையைக் கற்றுக் கொள்ள முடியும். பாடசாலைகளில் மேடை விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இதில் உதாரணமாக மாணவர்களிடையே நடாத்தப்படும் நாடகங்கள் அல்லது இசையரங்குகள் என்பனவாகும்.
பெற்றோர்
ஒவ்வொரு பாடசாலையிலும் பெற்றோருக்கான பிரதிநிதிகள் உள்ளனர். அதாவது பாடசாலையுடன் இணைந்து தொழில்புரியும் பெற்றோர். ஒரு வருடத்தில் பல முறை பெற்றோருக்காக மாலை நேர ஒன்றுகூடல் நடைபெறும். இந்த மாலை நேர ஒன்றுகூடலில் ஆசிரியர்களினால் பெற்றோருக்கான தகவல்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும் உதவுகின்றது. பெற்றோர் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஆசிரியரைச் சந்திப்பதற்கு முன்னேற்பாடாக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். இது பெற்றோருக்கான ஆலோசனை. பாடசாலையில் ஏதாவது பிரச்சனை ஏற்படின் இந்த ஆலோசனை நேரத்தில் கலந்துரையாடலாம். அல்லது பெற்றோர் தமது குழந்தையைப்பற்றி கேட்டறிந்து கொள்ளலாம்.
தலைப்புகளுக்கான இணைப்புகள்
Video International Sign
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள