கால்நடை மற்றும் துவிச்சக்கர வண்டி
கிராமங்களிலும் சில சிறிய நகரங்களிலும் நீங்கள் செல்லும் இடத்தை கால்நடையாக அடைந்து விடலாம். அநேகமானோர் ஜேர்மனியில் சுப்பர்மார்க்கட்டுக்கு அல்லது வேலைத்தளத்திற்கு துவிச்சக்கரவண்டியில் செல்வார்கள். துவிச்சக்கரவண்டி செல்லும் பாதை இல்லாது விடின் , துவிச்சக்கரவண்டியில் செல்லும் வளர்ந்தோர் சாலைப்பாதையில் செல்ல வேண்டும். 8 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் நடைபாதையில் ஓட்ட வேண்டும். இதைத்தவிர ஏனைய வீதி விதிகள் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் நடந்து செல்பவர்களுக்கும் உண்டு. உதாரணமாக சிவப்பு விளக்கு எரியும் போது பாதையைக்கடந்தால், சைக்கிள் விளக்கு உடைந்தால் போலிஸ் அவதானிக்கும் பட்சத்தில் இதற்கான தண்டப்பணத்தைச்செலுத்த வேண்டும்.
பொதுப்போக்குவரத்துச்சாதனங்களுடன்.
நகரங்களிலுள்ள பொதுப்போக்குவரத்துச்சாதனங்கள் சில: விரைவான புகையிரதம்;( S Bahn;) நிலத்திற்கு அடியிலான புகையிரதம் (UBahn;),ராம்கள்(தெற்கு ஜேர்மனியில் Trambahn; எனப்படும்) மற்றும் பஸ்கள். பொதுவாக டிக்கட்டுகளை புகையிரத நிலையத்தில் மற்றும் பஸ்தரிப்பிடங்களில் பெற்றுக்கொள்ளலாம். புகையிரத நிலையங்களில் டிக்கட் அலுவலகங்கள் உள்ளன.
சில வேளைகளில் டிக்கட்டுகளை பஸ்ஸினுள்ளும் வாங்கலாம்.
நீங்கள் பயண அனுமதிப்பத்திரத்தை கிழமைக்கு ,ஒரு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு வாங்க முடியும். இதைப்பெறுவதன் மூலம் நீங்கள் நாளாந்தம் பொதுப்போக்குவரத்துச்சாதனங்களைப் பயன்படுத்தும் போது அதற்கான கட்டணம் மலிவாக அமையும்.
பிள்ளைகள் , மாணவர், அங்கவீனமானவர்கள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கு சலுகைகள் உண்டு. அவர்கள் குறைவாகப்பணத்தைச்செலுத்த முடியும். உங்கள் டிக்கட்டுக்களை அதற்கான உத்தியோகத்தர்கள் (புகையிரதங்களிலும் பஸ்களிலும்) சோதனையிடுவார்கள். அவர்கள் சோதனையிடும் போது உங்களிடம் டிக்கட் இல்லையாயின் நீங்கள் அதற்கான தண்டப்பணத்தைச்செலுத்தவேண்டும்.
பஸ் தரிப்பிடங்கள் புகையிரத நிலையங்களில் நேர அட்டவணை காணப்படும். இந்த நேர அட்டவணையானது பஸ் மற்றும் புகையிரதங்கள் புறப்படும் நேரத்தையும் அவை சென்றடையும் இடத்தையும் காட்டுகின்றது. இத்தகவல்களை போக்குவரத்துக்கம்பனியின் இணையத்தளத்திலும் காணலாம்.
கார் மூலம்
அநேகமானோர் தமது சொந்தக்கார் மூலம் நகரங்களில் பயணிக்கின்றனர். பெரும்பாலான நகரங்களில் தரிப்பு நிலையங்கள், தரிப்பு இடங்கள் உள்ளன. பாதை அருகில் காணப்படும் பதாகைகள் மூலம் தரிப்பிடங்களைக்கண்டு கொள்ளலாம். அநேகமாக இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்தவேண்டும். நீங்கள் கார் ஓட்டுவதாய் இருந்தால் எப்பொழுதும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனத்திற்கான ஆவணங்களை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். உங்கள் வாகனத்தை பொலிசார் நிறுத்தினால் அவர்கள் இத்தகைய ஆவணங்களைக் ;கேட்பார்கள்.
தூரத்திற்குப்பயணித்தல்
நீங்கள் ஜேர்மனியில் ஏனைய இடங்களுக்கு அல்லது வெளிநாட்டிற்குப்பயணிக்க உள்ளீர்களா? நீங்கள் புகையிரதம் ,விமானம் மற்றும் பஸ் மூலம் பயணிக்கலாம். அநேகமான நகரங்களில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலேயே பஸ் தரிப்பிடம் இருக்கும். நீண்ட தூர ரயில் பயணங்களுக்கு ஜேர்மனியப்புகையிரதங்களை உபயோகிக்கவும். முன்னதாகவே உங்களது முன்பதிவுகளை மேற்கொண்டால் பணத்தை மிச்சப்படுத்தலாம். இலாபமாக டிக்கட்டுகளைப் பெறலாம். இதேபோல் விமானப்போக்குவரத்தும் அமையும். பெரிய கப்பல்கள் வடக்குக்கடலோர தீவுகள் மற்றும் கிழக்கு கடலோரத்திற்;கும் பயணிக்கின்றன.
தலைப்புகளுக்கான இணைப்புகள்
Video International Sign
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள