Eine Demonstration mit vielen Menschen ist zu sehen. Im Vordergrund sieht man eine Regenbogenfahne. © Goethe-Institut

ஜேர்மனிய அரசியலமைப்பு Grundgesetz என அழைக்கப்படுகிறது. இவ்வரசியலமைப்பு ஆனது ஜேர்மனியின் கூட்டாட்சிக்குடியரசின் முக்கியமான சட்டரீதியான மற்றும் அரசியல் விதிமுறைகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக இவ்வரசியலமைப்பில் ஜேர்மனி குடியாட்சிக்கு உரியது எனப்படுகிறது. இதன் பொருள் என்னவெனில் அனைவருக்கும் அரசியலில் பங்கெடுக்க உரிமை உண்டு. உதாரணமாக மன்றங்கள், பூர்வாங்க வேலைத்திட்டங்கள், அமைப்புக்கள் அல்லது கட்சிகளில்.

அரசியல் கட்சிகள் வேறுபட்ட திட்டங்கள் மற்றும் குறிக்கோளைக் கொண்டவை. தலமை வாய்ந்த கட்சிகளாக SPD( Sozialdemokratische Partei Deutschland :: ஜேர்மனிய சமூக ஜனநாயகக்கட்சி) CDU( Christlich Demokratische Union கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு), Bündnis  90/பச்சைக்கட்சி, FDP(Freie Demokratische Partei : சுதந்திர ஜனநாயகக்கட்சி), AfD (Alternative für Deutschland) மற்றும் Die Linke ஆகும. இதைத்தவிர அதிகமான சிறிய கட்சிகளும் உள்ளன.

Eine Demonstrationen zum Klima ist zu sehen. Viele Plakate werden in die Luft gehalten. © Goethe-Institut அரசியலமைப்பில் ஜேர்மன் நாட்டு பிரஜைகளின் உரிமைகள் மற்றும் கடமைகளும் அடங்கியுள்ளது. முக்கியமான கடமைகளில் ஒன்று கட்டாயமான பாடசாலை வரவு ஆகும். பிள்ளைகள் மற்றும் இளையவயதினர் கட்டாயமாக பாடசாலைக்குச் செல்ல வேண்டும். மற்றையது வரி செலுத்துதல் ஆகும். பணம் சம்பாதிப்போர் யாராயினும் வரிப்பணம் செலுத்த வேண்டும். சட்டத்திற்கான கடமையுணர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும். எல்லோரும் சட்டத்திற்கு கீழப்;படிய வேண்டும்.

கீழ்காணும் யாவும் முக்கியமான உரிமைகள் ஆகும் :

மனிதகௌரவம்: நீங்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.

மனித மேன்மை :- எல்லோருக்கும் சம உரிமை உண்டு. உதாரணமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சரிசமமான உரிமை உண்டு.

சட்டத்திற்கு முன்னால் சம உரிமை :- எல்லோரும் சட்டத்திற்கு முன் சமம்.

கருத்து தெரிவிக்கும் உரிமை :- மக்கள் தாம் நினைப்பதை தெரிவிக்கும் உரிமை உண்டு.

ஒன்று கூடுதலுக்கான சுதந்திரம் :- மக்கள் குழுக்களாகச் சந்திக்க அனுமதி உண்டு.

இடமாறுதலுக்கான சுதந்திரம் :- மக்கள் தாம் விரும்பியவாறு வாழவும் வதிவிடத்தை அமைக்கவும் அனுமதி உண்டு.

தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் :- தமது தொழிலைத் தேர்ந்தெடுக்க மக்களுக்குச் சுதந்திரம் உண்டு.

மேலதிக உரிமைகளாக திருமணம் மற்றும் குடும்பப் பாதுகாப்பு, வாக்களிக்கும் உரிமை, மற்றும் சமய சுதந்திரம்.

வாக்களிப்பதற்கான உரிமை என்பது, ஜேர்மனிய மக்கள் யரவரும் வாக்களிக்க சுதந்திரம் உண்டு. அவர்கள் தேர்வு செய்யப்படவும் அனுமதி உண்டு. தேர்தல் இரகசியமானது, பொதுவானது மற்றும் சுதந்திரமானது. இதில் ஐரோப்பிய தேர்தல், பாராளுமன்ற தேர்தல், மாநில தேர்தல் மற்றும் உள்ளுர்த்தேர்தல் என்பன அடங்கும். ஜேர்மனியில் வாழும் சகல ஐரோப்பிய பிரஜைகளும் ஐரோப்பிய தேர்தல் மற்றும் உள்ளுர் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு. சாதாரணமாக வாக்களிப்பு என்பது 18 வயது அல்லது அதற்கும் மேல் ஆகும். ஒரு சில கூட்டாட்சி மாநிலங்களில், 16 வயதிலிருந்து உள்ளுர் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு. மாநில தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஜேர்மன் குடியுரிமையுரிமை பெற்றவர்கள் ஆகக் குறைந்தது 18 வயதினையடைந்திருக்க வேண்டும். அநேகமான இடங்களில் ஒருங்கிணைப்பு ஆலோசனை மையங்கள் மற்றும் தொகுதிகள் உண்டு. இவ்வொருங்கிணைப்பு தொகுதிகள்  குடிபெயர்வோரினாலேயே தெரிவு செய்யப்படுகின்றன. இவை குடிபெயர்வோரின் அரசியல் ரீதியான ஈடுபாடுகளில் உதவுகிறார்கள். அத்துடன் அவர்களின் வினாக்கள் மற்றும் பிரச்சனைகளில் உதவுகிறார்கள். இவற்றின் குறிக்கோள் யாதெனில் குடிபெயர்வோரும் ஜேர்மனியரும் ஒன்றாக வாழும் முறையை மேம்படுத்துவதாகும்.


Das Innere einer christlichen Kirche ist zu sehen. © Goethe-Institut மதச்சுதந்திரம் என்பது யாதெனில், யாராயினும் தமக்குரிய மதத்தை தேர்வு செய்து பின்பற்றுவதற்கு சுதந்திரம் உண்டு என்பதாகும். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு ஜேர்மனியர்களுக்கு உத்தியோகபூர்வமாக எந்தவொரு மதமும் இல்லை. அநேகமானோர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள். இன்னொருவகையில் சொல்வதானால் அவர்கள் றோமன் கத்தோலிக்கம் அல்லது புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்.

அநேகமான கிறிஸ்தவ விடுமுறை நாட்கள் உதாரணமாக நத்தார் அல்லது உயிர்த்த ஞாயிறு என்பன பொது விடுமுறை ஆகும். அதாவது பொதுவாக இவ்விடுமுறை நாட்களில் வேலை செய்யத் தேவையில்லை. ஆனால் அநேகமான ஏனைய மத அங்கத்தவர்களும் ஜேர்மனியில் வாழ்கிறார்கள். பாடசாலைகளில் புரட்டாஸ்தாந்து மற்றும் கத்தோலிக்க மதத்தை தழுவிய பாடங்களும் நடாத்தப்படுகின்றன. சில பாடசாலைகளில் கிறிஸ்தவ ஒதொடொக்ஸ், யூத மதம் அல்லது இஸ்லாமியம் என்பனவும் காணப்படுகின்றன. பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மத அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அத்துடன் அவர்கள் எப்படியான மத அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள்ளலாம்.

2017 ஐப்பசி மாதம் முதலாம் திகதி முதல் ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர் அதாவது ஒரே பாலினத்தைச்சேர்ந்தவர்கள் சகல சட்ட கட்டுப்பாடுகளுடன் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.  இதன் கருத்தானது ஓரினச்செயர்க்கையாளர்கள் குழந்தைகைகளை தத்தெடுத்து வளர்க்கவும் , தமக்கு தேவையானவற்றைப்பூர்த்தி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.

2017 ஐப்பசி மாதம் முதலாம் திகதி முதல் ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர் அதாவது ஒரே பாலினத்தைச்சேர்ந்தவர்கள் சகல சட்ட கட்டுப்பாடுகளுடன் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.  இதன் கருத்தானது ஓரினச்செயர்க்கையாளர்கள் குழந்தைகைகளை தத்தெடுத்து வளர்க்கவும் , தமக்கு தேவையானவற்றைப்பூர்த்தி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.
 
Menschen sitzen vor einem Cafe in der Sonne. Ein Mann in einem Rollstuhl ist zu sehen. © Goethe-Institut
சட்டமானது சரியாகப்பிரயோகிக்கப்படாதவிடத்து  வேற்றுமை/ பாகுபாடு  கையாளப்படுகிறது. கீழேயுள்ள இணைய முகவரியை மேலதிகத்தகவல்களுக்குப்பார்க்கவும்.

Video International Sign

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.

படிவத்தை தொடர்பு கொள்ள