பொருட்களை வாங்குதல்
காணப்படும் களஞ்சிங்கள் மற்றும் கடைகள்
சகல நகரங்களிலும்;, ஆனால் ஒரு சில கிராமங்களிலும் பெரிய பல்பொருள் அங்காடிகள் காணப்படுகின்றன. அங்கே நாளாந்த தேவைக்கான அநேகமான பொருட்களை நீங்கள் வாங்கலாம். பாண் மற்றும் இறைச்சி, யோகட் மற்றும் சொக்கலட், சுத்திகரிக்கும் பொருட்கள் மற்றும் கடதாசி வகைகள். இப்பல்பொருள் அங்காடிகள் சாதாரணமாக காலை 7.00 மணியிலிருந்து ஆகக் குறைந்தது 8.00 மணிவரை திறந்திருக்கும். உங்களுக்கு புதிய பலசரக்கு மற்றும் மரக்கறி, பழவகைகளை வாங்க வேண்டுமா? அநேகமான இடங்களில் கிழமையில் ஒன்று அல்லது இரண்டு தடவை சந்தை காணப்படும். அநேகமாக சனிக்கிழமைகளில் இது காணப்படும். இங்கே புதியதான பழவகை, மரக்கறி மற்றும் உள்ளூரில் பிரசித்தி பெற்றவைகளை பெற்றுக் கொள்ள முடியும். புதியதான இறைச்சி மற்றும் சோசேயஸ் வகைகளை இறைச்சிக்கடைகளில் (தெற்கு ஜேர்மனியில் இவை (Metzgereien) என அழைக்கப்படும்). புதிய பாண்வகைகளை வெதுப்பகங்களில் பெற்றுக் கொள்ளலாம். வெதுப்பகங்கள், இறைச்சிக்கடைகள் மற்றும் சில கடைகள் மதிய நேரங்களில் ஒருபகுதி மூடப்பட்டிருக்கும். மாலை நேரங்களில் அநேகமாக 18.00 அல்லது 18.30 மணிவரைக்கும் திறக்கப்பட்டிருக்கும். கிழமை நாட்களிலுள்ள சந்தைகள் சாதாரணமாக அதிகாலையிலிருந்து பிந்திய மதியம் வரைக்கும் காணப்படும். ஞாயிற்றக்கிழமையில் எல்லாம் மூடப்பட்டிருக்கும்.
விநியோக சேவை
உங்களுக்கு வீட்டிலிருந்து வெளியே செல்ல விருப்பமில்லை எனின், நீங்கள் விநியோக சேவையை அணுக முடியும். விநியோக சேவையிடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையத்திலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புதல் மூலமாகவோ இதை மேற்கொள்ள முடியும்.
இதன் மூலம் யாரும் ஒரு நபர் பிஸ்சாவையோ அல்லது குடிநீர் போத்தலையோ அவசர தேவைக்கு உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து தருவார்கள். ஏதுவாயினும் இச்சேவையானது கடையில் வாங்குவதை விட விலை அதிகமானதாகும். அநேகமான கிராமப்புறங்களில் கடைகள் காணப்படமாட்டாது. நடமாடும் வர்த்தகங்கள் அடிக்கடி பிரயாணம் செய்து அங்கு பலசரக்கு மற்றும் அன்றாடம் தேவையான பொருட்களை விற்பனை செய்வார்கள்.
பிரத்தியேகமான கடைகள் மற்றும் இணையம்
நீங்கள் அலுமாரி, கணினி அல்லது சப்பாத்து போன்றவற்றை உதாரணமாக வாங்க இருப்பின், நீங்கள் அதற்கான பெரிய வர்த்தக கடைகள் அல்லது அதற்கான பிரத்தியேகமான கடைகளில் வாங்க முடியும். பெரிய வர்த்தக கடைகள் அநேகமான நகரங்களில் காணப்படுகின்றன. பிரத்தியேகமாக அமைந்துள்ள கடைகள் குறிப்பிட்ட உற்பத்திப் பொருளிலேயே விசேடமாக காணப்படுவன. உதாரணமாக தளபாடக்கடைகள், இலத்திரனியல் அல்லது பாதணிக்கடைகள் திறக்கப்படும் நேரங்கள் அநேகமாக காலை 9.00 இலிருந்து இரவு 8.00 மணிவரை. ஆனால் சில வேளைகளில் மாலை 6.30 மணிவரைக்கும் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பொருட்கள் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அநேகமாக ஒருசில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். அத்துடன் பொருட்கள் வீட்டிற்கு கொண்டுவந்து தரப்படும்.
கட்டணம்
ஜேர்மனியில் பல்வேறுவகையான கட்டணங்களை செலுத்தும் முறை நடைமுறையிலுள்ளது. பணமாக எங்கேயும் கட்டணங்களைச் செலுத்தலாம். உங்களுக்கு வங்கியுடன் சேமிப்புக் கணக்கு இருப்பின் உங்களுக்கு பெரும்பாலும் கடனட்டை கிடைக்கும் (MasterCard / Visa). ஒருசில வர்த்தகக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிரத்தியேகமாக அமைந்துள்ள கடைகளில் உங்களது கடனட்டை மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.
இணையத்தில் கடனட்டை மூலமும், வங்கியில் கட்டணங்களை கட்டுதல் அல்லது பற்றுச்சீட்டு மூலமும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம். நீங்கள் வங்கியூடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள விரும்பினால், இணையத்தில் உங்கள் வங்கிக் கணக்கு தரவுகளை வழங்க வேண்டும். இதன் மூலம் பணம் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து கழிக்கப்டும். பற்றுச்சீட்டின் மூலம் உங்கள் கணக்கிலிருந்து பணம் செலுத்தப்படுகின்றது.
விலை, உத்தரவாதம் மற்றும் மாற்றுதல்
ஜேர்மனியில் அநேகமான கடைகளில் சகல பொருட்களுக்கும் நிரந்தர விலை குறிப்பிடப்பட்டிருக்கும். சந்தை மற்றும் பெரிய வர்த்தகக்கடைகளில் சில வேளைகளில் விலையை பேசித்தீர்க்கலாம். ஆனால் சாதாரணமாக இது வழமையானது அல்ல.
நீங்கள் ஏதாவது பொருளை வாங்கி அதில் ஏதாவது பாதிப்பு உள்ளதா?
இரண்டு வருட சட்ட விதிமுறைகளுக்கமைந்த உத்தரவாதத்தின் மூலம் நீங்கள் உரிமை கோரலாம். அப்பொருளை நீங்கள் திரும்பக்கொடுத்து புதியதொன்றைப் பெறலாம் அல்லது உங்கள் பணம் மீளக்கொடுக்கப்படும் அல்லது நீங்கள் குறைவான தொகையைச் செலுத்தலாம்.
சிலவேளைகளில் உற்பத்திப் பொருட்களுக்கு உத்தரவாதம் உண்டு. ஒரு பொருளானது, உதாரணமாக தொலைக்காட்சியெனின், உத்தரவாத காலத்திற்குள் உடைந்தால், அது கட்டணம் எதுவும்; இன்றி திருத்திக் கொடுக்கப்படும். அல்லது உங்களுக்கு புதிய தொலைக்காட்சி வழங்கப்படும். சில கடைகள் பொருட்களை மாற்றுவதற்கான சலுகைகளை வழங்குகின்றன. உங்களுக்கு அப்பொருள் பிடிக்கவில்லை எனின் அதை திரும்பவும் கொடுக்கலாம். உங்கள் பணம் திரும்பவும் கொடுக்கப்படும். இணையத்தில் அல்லது பெரிய கடைகளில் மற்றும் பெரியளவிலான பல்பொருள் அங்காடிகளில் பெரும்பாலும் 14 நாட்களுக்குள் பொருட்களை மாற்றுவது சாத்தியப்படும்.
Video International Sign
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள