ஆவணங்கள்
அநேகமான நாடுகளில் மக்கள் திருமணப்பதிவு அலுவலகத்திலேயே திருமணம் முடிக்கின்றனர். இது அரசினால் அங்கிகரிக்கப்பட்டதாகும். இது போலவே ஜேர்மனியிலும். நீங்கள் தேவாலயத்திலும் திருமணம் முடிக்கலாம் . தேவாலயத்திருமணம் பதிவுத்திருமணத்திற்குபின்னரே நடைபெறும்.
நீங்கள் ஜேர்மனியில் திருமணம் முடிக்க வெரும்புகிறீர்களா? அப்படியாயின் உங்கள் வதிவிடத்திலுள்ள பதிவு அலுவலகத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு சில ஆவணங்கள் தேவைப்படும். உங்களது பதிவு அட்டை, ஆளடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு மற்றும் பிறப்புச்சான்றிதழ்.
உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் பிள்ளைகள் உண்டா?அப்படியாயின் உங்களது பிள்ளைகளின் ஆவணங்களும் தேவை. இவை அனைத்தும் ஜேர்மன்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் ஒரு நொத்தாரிசு மூலம் இம்மொழிபெயர்ப்பு சரியென உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
அக்டோபர் 1, 2017 முதல்,ஜேர்மனியில் ஒரே பாலின தம்பதியினர் அனைத்து உரிமைகள் மற்றும் கடமைகளுடன் திருமணம் செய்து கொள்ளலாம். உதாரணமாக, இதன் பொருள், ஏனையஜோடிகளைப் போலவே, நீங்கள் தேவையான தேவைகளைப் பூர்த்தி செய்தால் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம்.
நீங்கள் திருமணம் முடித்திருந்தால் , உங்களுக்கு புதியதொரு ஆவணம் பதிவு அலுவலகத்தால் கொடுக்கப்பட்டிருக்கும். இது திருமணப்பதிவு சான்றிதழ். உங்களுக்கு விருப்பமாயின் அவர்கள் குடும்பப்பதிவையும் தருவார்கள். இதில் உங்கள் குடும்பத்தைப்பற்றிய தகவல்கள் அடங்கியிருக்கும்.
உங்களது சொந்த நாட்டில் நீங்கள் திருமணம் முடித்தவரா? அப்படியாயின் அந்நாட்டில் உங்களுக்கு ஒரு ஆவணம் வழங்கப்பட்டிருக்கும். இந்த ஆவணம் ஆனது வெளிநாட்டு திருமணச் சான்றிதழ் ஆகும். ஜேர்மனியிலுள்ள பதிவு அலுவலகத்தினால் அங்கீகரிக்கப்படுத்தப்பட்டு நீங்கள் அதை வைத்திருக்கலாம்.
திருமணக் கொண்டாட்டங்கள்
அநேகமானோர் தமது திருமணத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். பெண் - மனைவி அநேகமாக வெள்ளை நிற திருமண ஆடையை அணிந்திருப்பார். பெரும்பான்மையானோர் திருமண மோதிரத்தை வைத்திருப்பர்;. திருமணத்தின் போது மணமகன் - கணவர் தனது மனைவியிடமிருந்து மோதிரத்தையும், மனைவி தனது கணவரிடமிருந்து மோதிரத்தையும் பெற்றுக் கொள்வார்கள். மத்திய வெளிநாட்டு அலுவலக இணையத்தளத்தில் மேலதிக தகவல்களை 'சர்வதேச திருமணம்' எனும் தலைப்பின் கீழ் கண்டறியலாம்.
உங்கள் கணவர் அல்லது மனைவியிடம் வருவதற்கான தகவல்களை டீயுஆகு இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.
பிரிதல் மற்றும் விவாகரத்து
பல்வேறுபட்ட காரணங்களால் தம்பதியர் பிரிதல் அல்லது விவாகரத்திற்கு உடன்படலாம். அநேகமாக பிள்ளைகள் இதனால் பாதிக்கப்படுமிடத்து மற்றும் தாபரிப்பு பணம் தொடர்பாக அதற்கான ஆலோசனைகள் பயன்படலாம். ஆலோசனை மையங்கள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உதவக் கூடியவை.
Video International Sign
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள