இது எப்படி தொழிற்படுகிறது?
உங்களுக்கு ஏதவது கேள்வி அல்லது பிரச்சனை உண்டா? உங்களுக்கு விடை அல்லது துப்புக்கள் வேண்டுமா? ஆலோசனை வேளையில் உங்களுக்கு உதவும் மக்களைக்காண்பீர்கள். இந்த ஆலோசனையாளர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் அல்லது உங்களுக்கு எங்கே உதவி கிடைக்கும் என அவர்களுக்குத்தெரியும்.
நீங்களாகவே இப்படியான ஆலோசனை நேரத்திற்குச்செல்ல விரும்பாவிடின், உங்களுடன் யாரையாவது அழைத்துச்செல்லலாம். உதாரணமாக உங்கள் கணவன் /மனைவி, காதலன் / காதலி அல்லது வேறு யாராவது. அநேகமான ஆலோசனை மையங்கள் நீங்கள் தொலைபேசிமூலம் அழைப்புவிடுத்துப்பேச அனுமதி அளிக்கின்றன. உங்கள் ஆலோசனையாளர்கள் உங்கள் கேள்விகளுக்கு தொலைபேசிமூலம் பதிலளிப்பார்கள். மற்றும் இணையத்திலும் மின்னஞ்சல் மூலமாகவும் உhயவ மூலமாகவும் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆலோசனை நேரங்கள் அநாமதேயமாகப்பேணப்படும். ஆலோசனையாளர்கள் உங்களுடன் உங்கள் பிரச்சனைகள் மற்றும் வினாக்களை உங்களுடன் கலந்துரையாடுவார்கள். அவர்களுக்கு உங்களது பிரச்சனைகள் மற்றும் வினாக்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த அனுமதி இல்லை.
ஆலோசனை நடுநிலையாக இருக்கும். ஆலோசனையாளர்கள் உங்களுக்கு உதவி செய்யவே விருப்புகிறார்கள். அவர்களிடம் தனிப்பட்ட விடயங்களையும் தெரிவிக்கலாம். நீங்கள் பயப்படத்தேவையில்லை. பொதுவாக ஆலோசனை நேரங்கள் இலவசமானவை. நீங்கள் பெற்றுக்கொள்ளும் உதவிக்கு பணம் செலுத்த தேவையில்லை. சில வேலைகளில் அவர்கள் உடனடியாக உங்களுக்கு உதவக்கூடும். மற்றைய நேரங்களில் முன்கூட்டிய பதிவை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
எனக்காக விசேடமான ஆலோசனை சேவைகள் உண்டா?
குடியகல்வோருக்காக விசேடமான ஆலோசனை சேவைகள் உள்ளன.
வளர்ந்தோருக்கான குடியகல்வு ஆலோசனை( MBE),இளவயதினருக்கான ஆலோசனை மையம் ( JMD), இவை அநாமதேயமானவை, நடுநிலையானவை, மற்றும் இலவசம். ஆடீநு ஆனது சகல வளர்ந்த குடியகல்ந்தவர்களுக்கு உதவும். JMD ஆனது 12 வயதிற்கும் 27 வயதிற்கும் இடைப்பட்டோருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உதவும்.. அநேகமான ஆலோசனையாளர்கள் பலதரப்பட்ட மொழியைப்பேசக்கூடியவர்கள் . ஆலோசனையாளர் உங்கள் மொழியைப்பேச முடியாதவராயின், உங்களுக்கும் ஜேர்மன் மொழியை இன்னும்நன்றாகப்பேசத்தெரியவில்லையாயின் என்ன செய்யலாம்? அப்படியானால் மொழிபெயர்ப்பாளர் உதவக்கூடும். அவர் இரு மொழிகளையும் பேசக்கூடும்.
ஆலோசகர்களிடம் நான் என்ன கேட்கலாம்?
ஜேர்மனியில் உங்கள் வாழ்க்கைக்கு MBE மற்றும் JMD உங்களுடைய வினாக்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு உதவ முடியும். உதாரணமாக , நான் எவ்வளவு காலம் எனது விசாவுடன் ஜேர்மனியில் இருக்க முடியும். குடும்பப்பிரச்சனைகளுக்கு நான் எங்கே உதவியைப்பெறமுடியும்? நான் எங்கே ஜேர்மன்மொழியைக்கற்க முடியும்? எங்கே தங்குமிடத்தை தேடமுடியும்? நான் ஜேர்மனியில் வேலை செய்ய முடியுமா? தொழிலை எங்கே நான் தேடலாம்? பண ரீதியான பிரச்சனைகள் எனக்கு ஏற்படின் நான் என்ன செய்யலாம்? நான் சுகவீனமடைந்தால் என்ன செய்வது? எனக்கு குழந்தை இருந்தால் யார் உதவுவார்கள்? வாகனச்சாரதிப்பத்திரத்தை எங்கே பெறுவது? எப்படியான புகையிரத டிக்கட் எனக்குத்தேவை? எனது சான்றிதழ்களை நான் எங்கே உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்? முக்கியமாக JMD ஆனது பாடசாலை ஒழுங்கமைப்பு மற்றும் தொழில்சார்கல்வி பயிற்சிகளுக்கும் உதவுகிறது.
நான் ஜேர்மனியில் வாழ்கிறேன் . நான் எப்படி ஆலோசனை இடங்களைக்கண்டு பிடிப்பது?
நீங்கள் ஏற்கனவே ஜேர்மனியிலா வசிக்கிறீர்கள்? நீங்கள் ஆலோசனைகான தொடர்புகளைதேடுகிறீர்களா? முக்கியமான முகவரிகள் எனும் தலைப்பின் கீழ் ஆலோசனை மையங்களை (MBE,JMD) உங்களுக்கு அருகில் கண்டுபிடிக்கலாம். இதற்கான தகவல்கள் அடங்கிய தரவுகள் ,உதாரணமாக முகவரி மற்றும் தொலைபேசி எண் தோற்றமளிக்கும்.
நான் இன்னும் எனது தாய்நாட்டிலேயே இருக்கிறேன் . எனக்கும் ஆலோசனை உண்டா?
நீங்கள் இன்னும் ஜேர்மனிக்கு வரவில்லையா? உங்களுக்கு ஆலோசனை தேவையா? இணையத்தில் குடியகல்வொருக்கான ஆலோசனை உள்ளது. இணையத்தில் ஆலோசனையை கிளிக் செய்யவும். இங்கு மேலதிக தகவல்களைபெர்றுக்கொள்ளலாம்.